ஆக்கிரமிப்பை அகற்றாமல் சிமென்ட் சாலை

Added : செப் 06, 2022 | |
Advertisement
நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் சாதனைசெங்குன்றம் :குடியிருப்புக்கு மத்தியில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், சிமென்ட் சாலை அமைத்தது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சென்னை செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, எட்டாவது வார்டு, தர்கா தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, தனியார் சிலர், விபத்து,
ஆக்கிரமிப்பை அகற்றாமல் சிமென்ட் சாலை




நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் சாதனை



செங்குன்றம் :குடியிருப்புக்கு மத்தியில், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், சிமென்ட் சாலை அமைத்தது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சென்னை செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, எட்டாவது வார்டு, தர்கா தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, தனியார் சிலர், விபத்து, உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றனர்.மேலும், 240 அடி நீளம், 14 அடி அகலம் உடைய தர்கா தெரு, தனியார் ஆக்கிரமிப்பால், முட்டுச்சந்தாக மாறி விட்டது. அதை பயன்படுத்தி, கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்துவோர், 50 அடி நீளம், 10 அடி அகலத்திற்கு தெருவை ஆக்கிரமித்தனர். அதில், கட்டுமான பொருட்களை இருப்பு வைக்கும், குடோன் கட்டினர்.'பிளாஸ்டிக்' குழாய், இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களை தெருவில் போட்டு வைப்பதால், பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் தெருவில் விளையாட முடிவதில்லை. முதியோர், நோயாளிகள் பாதுகாப்பாக சென்று, வர முடியாத நிலை உள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிக்குள் இருக்கும் கடைக்கு வரும் வாகனங்களால், குடியிருப்புகளில் வசிக்கும், அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.இந்த ஆக்கிரமிப்பு தடுப்பு சுவர், குடோன் ஆகியவற்றால், பலத்த மழையின் போது, வெள்ள நீர் வடிந்து செல்ல வழியின்றி, குடியிருப்புகளில் பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.விபத்துகள் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் கட்டுமான பொருள் விற்பனை கடை, ஆக்கிரமிப்பு குடோன், தடுப்பு சுவர் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகத்திடம், பொதுமக்கள், பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்த நிலையில், அந்த தெருவில் வசித்தவர், கடந்தாண்டு, உடல் நலமின்றி இறந்த போது, அவரது உடலை வீட்டிற்குள், எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால், ஏற்பட்ட பிரச்னையில் அங்கிருந்த ஆக்கிரமிப்பு தடுப்பு சுவர், இறந்தவரின் உறவினர்களால் இடிக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், அப்பகுதி மக்கள், தெருவின் நீளம், அகலம் மற்றும் குடோன் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட, ஆவணங்கள் வாயிலாக, மழைநீர் வெளியேற தடையாக இருக்கும் மற்றொரு தடுப்பு சுவர் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.இதையடுத்து கடந்த வாரம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மற்றும் பொன்னேரி வருவாய்த்துறையினர், தெருவை அளந்து அறிக்கை அளிக்க சென்றனர்.அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களை அளக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதன் பிறகு, செங்குன்றம் போலீசார் உதவியுடன் தெருவின் நீளம், அகலம் ஆகியவை அளவீடு செய்யப்பட்டது.அப்போது தான், ஆக்கிரமிப்பு தடுப்பு சுவர், குடோன் ஆகியவற்றை அகற்றாமல், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், சிமென்ட் சாலை அமைத்துள்ளது, வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், குடியிருப்பு பகுதிக்குள் தொழில்துறை அனுமதியின்றி கடை நடத்துவதும், தங்கள் வசதிக்காக தெருவில் ஆழ்துளை குழாய் அமைத்திருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, தங்களுக்கு இடையூறாக இருக்கும், கட்டுமான பொருட்கள் விற்பனை கடை மற்றும் ஆக்கிரமிப்புகளை, முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த மாதம், 30ம் தேதியும், செங்குன்றம் காவல் மாவட்ட துணை கமிஷனரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X