அபாயகரமான நிலையில் ராயபுரம் மேம்பாலம்

Added : செப் 06, 2022 | |
Advertisement
ராயபுரம்:அபாயகரமான நிலையில் உள்ள ராயபுரம் பாலம் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை ராயபுரம் மேம்பாலம், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த மேம்பாலம் மின்ட், பாரிமுனை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, மூலக்கடை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை.காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்பாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர்
அபாயகரமான நிலையில் ராயபுரம் மேம்பாலம்

ராயபுரம்:அபாயகரமான நிலையில் உள்ள ராயபுரம் பாலம் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை ராயபுரம் மேம்பாலம், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த மேம்பாலம் மின்ட், பாரிமுனை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, மூலக்கடை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை.காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைப்பாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மேம்பாலம், பராமரிப்பின்றி அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது. மேம்பாலத்தில் நடைபாதை முழுவதும் உடைந்துள்ளது.மேலும் சுற்றுச்சுவர் முழுதும் உடைந்து, கம்பிகள் வெளியே நீட்டிய படி, அபாயகரமான நிலையில் காட்சியளிக்கிறது. இப்பகுதி மதுபாட்டில்களும்குவிந்து, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டிவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:ராயபுரம் பாலத்தில் நடைபாதை முழுவதும் உடைந்து பெரிய பள்ளங்களாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் விரிசல் விழுந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் பாதசாரிகளும் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே பழுதடைந்து அபாயகரமான நிலையில் உள்ள நடைபாதையை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X