போலீஸ் தம்பதிதற்கொலை முயற்சி| Dinamalar

போலீஸ் தம்பதிதற்கொலை முயற்சி

Added : செப் 06, 2022 | |
அயிரம் விளக்கு, :காவலர் குடியிருப்பில், தற்கொலைக்கு முயன்ற போலீஸ் தம்பதி மீட்கப்பட்டனர். ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர், மகாராஜா. 29. தனிப்படை பிரிவில் பணிபுரிகிறார். இவரது மனைவி, ஜீவா, 25, வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். ஜீவா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு மகாராஜா பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளர்.

அயிரம் விளக்கு, :காவலர் குடியிருப்பில், தற்கொலைக்கு முயன்ற போலீஸ் தம்பதி மீட்கப்பட்டனர். ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர், மகாராஜா. 29. தனிப்படை பிரிவில் பணிபுரிகிறார். இவரது மனைவி, ஜீவா, 25, வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். ஜீவா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு மகாராஜா பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளர். இதுகுறித்து ஜீவா கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜீவா, துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதே கயிற்றில் மகாராஜாவும் துாக்கு போட முயன்றுள்ளார். அப்போது, மகாராஜா திடீரென தவறி விழுந்ததில் காயமடைந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X