திருநீர்மலை சாலையில் முழுமை பெறாத கால்வாய்

Added : செப் 06, 2022 | |
Advertisement
வீடுகளுக்குள் கழிவு நீர் தேங்குவதால் அவதிதிருநீர்மலை, பல்லாவரம்- - திருநீர்மலை சாலையில், முழுமை பெறாத கால்வாயில், கழிவு நீர் தேங்கி, குடியிருப்புகளில் புகுவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அதேபோல், மூடப்பட்ட ஏரியின் கலங்கலையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.ஜி.எஸ்.டி., சாலையில், பல்லாவரத்தில் இருந்து பிரிந்து செல்கிறது
திருநீர்மலை சாலையில் முழுமை பெறாத கால்வாய்


வீடுகளுக்குள் கழிவு நீர் தேங்குவதால் அவதி



திருநீர்மலை, பல்லாவரம்- - திருநீர்மலை சாலையில், முழுமை பெறாத கால்வாயில், கழிவு நீர் தேங்கி, குடியிருப்புகளில் புகுவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.அதேபோல், மூடப்பட்ட ஏரியின் கலங்கலையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.ஜி.எஸ்.டி., சாலையில், பல்லாவரத்தில் இருந்து பிரிந்து செல்கிறது திருநீர்மலை சாலை. இச்சாலையை ஒட்டி, வணிக நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை என, ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. மேலும், இச்சாலை, சென்னை புறவழி மற்றும் வெளிவட்ட சாலைகளையும் இணைக்கிறது.இதனால், எந்த நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. இச்சாலையில், 2012ம் ஆண்டு, மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. அப்போது, கால்வாயை தொடர்ச்சியாக கட்டாமல், ஆங்காங்கே பாதி பாதியாக விட்டு விட்டனர். இதனால், கால்வாய் வழியாக செல்லும் மழைநீர், தொடர்ச்சியாக செல்ல வழியின்றி, கால்வாயிலேயே தேங்குகிறது.சமீபகாலமாக, இது அதிகரித்து, ஏரிக்கரை பிள்ளையார் கோவில் எதிரே குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுவது தொடர் கதையாகிவிட்டது. இதனால், அங்கு வசிப்பவர்கள் பெரும் அவதிக்குஉள்ளாகியுள்ளனர். இது குறித்து, புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:கால்வாயை தொடர்ச்சியாக கட்டினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதேபோல், பிள்ளையார் கோவில் அருகே இருந்த திருநீர்மலை ஏரியின் கலங்கலை மூடிவிட்டனர். கலங்கல் இருந்தபோது, தண்ணீர் கோவில் எதிரே உள்ள கால்வாய் வழியாக நாட்டு கால்வாய்க்கு செல்லும். இதனால், நிலத்தடி நீர் மாசடையாமல் இருந்தது.கலங்கலை மூடிவிட்டதால், கால்வாயை கழிவு நீர் தேக்கும் பகுதியாக மாற்றிவிட்டனர். இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து அவதிப்படுகிறோம்.அதனால், மூடப்பட்ட கலங்கலை மீண்டும் திறக்க வேண்டும். அதேபோல், கோவிலை ஒட்டி, அரசியல்வாதிகளின் துணையோடு அதிகரித்து வரும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X