எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் முயற்சி பலிக்குமா? ...

Updated : செப் 06, 2022 | Added : செப் 06, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி : லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவதாரத்தை எடுத்துள்ள பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் முயற்சி பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, புதுடில்லியில், காங்கிரஸ் முன்னாள்
எதிர்க்கட்சிகள், ஒருங்கிணைப்பு, நிதிஷ்,

புதுடில்லி : லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அவதாரத்தை எடுத்துள்ள பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் முயற்சி பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக, புதுடில்லியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். அதே நேரத்தில், பிரதமர் பதவியை தான் விரும்பவில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.

பீஹாரில் பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்த்து புதிய அரசு அமைத்துள்ளார். எட்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற அவர், பா.ஜ.,வுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

மேலும் பா.ஜ.,வுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற வேண்டும் என, அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அதே நேரத்தில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு உள்ளார்.
இதேபோல, தெலுங்கானா முதல்வரான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும், பா.ஜ., மற்றும் காங்., அல்லாத கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார்.
இதன்படி, அவர் சமீபத்தில் பீஹாருக்கு சென்று நிதிஷ்குமாரை சந்தித்தார்.

இந்த சூழ்நிலையில், புதுடில்லிக்கு வந்துள்ள நிதிஷ்குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். நேற்று, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜாவை சந்தித்தார்.இதைத் தொடர்ந்து புதுடில்லி முதல்வரான, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.வரும், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் திரண்டுள்ளன. ஆனால், இந்த கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் கூடாது என்று மம்தாவும், சந்திரசேகர ராவும் கூறுகின்றனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை நிச்சயம் சேர்க்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறுகிறார். அதனால், நிதிஷ்குமாரின் இந்த முயற்சி பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பிரதமர் கனவில் உள்ளனர். இந்நிலையில், நிதிஷ்குமாருக்கும் அந்த ஆசை வந்துள்ளதாக அவர் விமர்சிக்கப்படுகிறார். ஆனால், அதை அவர் மறுத்துள்ளார்.இந்நிலையில், புதுடில்லியில், சீதாராம் யெச்சூரி உடனான சந்திப்புக்குப் பின், நிதிஷ்குமார் கூறியதாவது:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனக்கு சிறு வயதில் இருந்தே தொடர்பு உள்ளது.

எப்போது புதுடில்லி வந்தாலும், இந்த அலுவலகம் வருவேன். தற்போதைக்கு எங்களுடைய முக்கிய நோக்கம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அனைத்து பிராந்திய கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான்.நான் பிரதமர் பதவிக்காக இந்த முயற்சிகளை எடுக்கவில்லை. பிரதமர் பதவிக்கு எப்போதும், நான் உரிமை கோரியதும் இல்லை. அதற்கான ஆசையும் எனக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது:

நிதிஷ்குமார், பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து புதிய அரசை அமைத்துள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.தற்போதைய நிலையில், பீஹாரில் தனிப்பெரும் கட்சியாக லாலுவின் கட்சி உள்ளது. அடுத்து, 2025ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது தான் அக்கட்சியின் நோக்கமாக இருக்கும்.அதனால், 'பிரதமர் பதவிக்கு தகுதியுள்ளவர் நிதிஷ்குமார்' என, தேஜஸ்வி கொளுத்தி போட்டார்.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களும், அதை பிடித்துக் கொண்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணி அமைத்தாலும், ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் பிரதமர் பதவி ஆசை இருக்கும்.முதலில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதிலேயே அவர்களுக்குள் குழப்பம் உள்ளது. அதையும் மீறி கூட்டணி உருவானாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதில் பெரும் போட்டி ஏற்படும். அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணி முறிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
07-செப்-202220:23:37 IST Report Abuse
sankar தகரடப்பாக்கள் சத்தம் அதிகமா இருக்கே - எப்போ பீச புடுங்கப்போறாங்களோ - அங்கும் ஒரு ஏகநாதர் வருகிறாராம்
Rate this:
Cancel
Balakrishnan S - Trichy,இந்தியா
07-செப்-202218:14:54 IST Report Abuse
Balakrishnan S நவகிரகங்கள் என்றும் ஒரே திசையில் பார்ப்பதில்லை..
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-202218:01:55 IST Report Abuse
Yaro Oruvan ஹா ஹா.. நித்திய நம்பி.. ம்ம்க்கும் .. விளங்கும்.. அந்தாளு ஆறு மாசத்துக்கு ஒரு கூட்டணி மாருவார்... அவரை நம்பி கூட்டணிசேந்தா வெளங்கீரும்.. அப்போ நம்ம தெலுங்கானா மூக்கையா / வங்காள சொர்ணாக்கா / தில்லி போர்ஜரிவால் / நம்மூர் விடியல் இவுங்கெல்லாம் பிரதமர் ஆவ முடியாதா?? என்னமோ போங்க.. அடுத்து ரெண்டு வருஷத்துக்கு இவனுவ காமெடி நல்ல டைம் பாஸ்.. ஸ்டார்ட் மியூசிக்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X