ஒரு நபர் குழு விசாரணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Added : செப் 06, 2022 | |
Advertisement
மதுரை:துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு நபர் குழு விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலர் அர்ஜுனன், 2018ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர்

மதுரை:துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஒரு நபர் குழு விசாரணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
துாத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலர் அர்ஜுனன், 2018ல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர்.
சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இதில், விதிமுறைகள் பின்பற்றவில்லை. அவர் நேரடி சாட்சிகளை மட்டுமே விசாரிக்கிறார். இது ஒருதலைபட்சமானது. விசாரணை கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும். கமிஷன் அமைத்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பு, 'நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்' என, தெரிவித்தது.நீதிபதிகள், 'இம்மனு காலாவதியாகிவிட்டது. தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X