ஆயுதப்படை போலீசார்'டிரான்ஸ்பர்' இழுபறி:உளவுப்பிரிவிலும் சுணக்கம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
சிவகங்கை:தமிழகத்தில் ஆயுதப்படை பிரிவுகளில் பணிபுரியும் போலீசார்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கி பல மாதங்களாகியும் மாறுதல் செய்யாததால் அதிருப்தியில் உள்ளனர்.தமிழக காவல்துறையில் ஆயுதப்படை பிரிவுகளில் பணிபுரியும் போலீசாருக்கு 3 மாதங்களுக்கு முன் விருப்ப பணியிட மாறுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தாங்கள் விரும்பிய மாவட்ட ஆயுதப்படை பிரிவில் மாறுதல் கேட்டு பலர்

சிவகங்கை:தமிழகத்தில் ஆயுதப்படை பிரிவுகளில் பணிபுரியும் போலீசார்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கி பல மாதங்களாகியும் மாறுதல் செய்யாததால் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக காவல்துறையில் ஆயுதப்படை பிரிவுகளில் பணிபுரியும் போலீசாருக்கு 3 மாதங்களுக்கு முன் விருப்ப பணியிட மாறுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தாங்கள் விரும்பிய மாவட்ட ஆயுதப்படை பிரிவில் மாறுதல் கேட்டு பலர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டது.
ஆனால் அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் தங்களுக்கு வரவேண்டிய போலீசார் வந்தால் தான், மாறுதல் வழங்குவோம் எனக்கூறி 3 மாதங்களுக்கும் மேலாக பணியிட மாறுதல் உத்தரவை அமல்படுத்தவில்லை.அதே நேரம் இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் மாற்றப்பட்ட பணியிடத்திற்கு போலீசார் சென்றுவிட வேண்டும் என டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இடமாறுதல் உத்தரவு மட்டுமின்றி டி.ஜி.பி.,யின் உத்தரவும் காகித அளவிலேயே உள்ளதாக ஆயுதப்படை போலீசார் புலம்புகின்றனர்.மாவட்டந்தோறும் நடக்க உள்ள நிகழ்வுகள் குறித்து அரசுக்கு நேரடியாக தகவல் தரும் உளவுப்பிரிவில் (எஸ்.பி.சி.ஐ.டி.,) பணிபுரிய மாநில அளவில் 15 க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களையும் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விடுவிக்கவில்லை. இம்மானுவேல் சேகரன் விழா, முத்துராமலிங்க தேவர், மருதுபாண்டியர் விழா உள்ளிட்ட நிகழ்வுகளை கண்காணிக்க எஸ்.ஐ.,களின்றி உளவுப்பிரிவும் சுணங்கி கிடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X