சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை| Dinamalar

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 07, 2022 | |
புதுச்சேரி:சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த கொத்தனாருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்தது.புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, முத்தியால்பேட்டை துணிக்கடையில் வேலை செய்தார்.கடந்த 2019ல், துணிக்கடைக்கு சென்ற சிறுமி மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால்,

புதுச்சேரி:சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்த கொத்தனாருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, முத்தியால்பேட்டை துணிக்கடையில் வேலை செய்தார்.கடந்த 2019ல், துணிக்கடைக்கு சென்ற சிறுமி மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், முத்தியால்பேட்டை போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

அப்போதைய இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.விசாரணையில், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வாணரப்பேட்டை தெருவை சேர்ந்த கருணாகரன் என்ற சீனு, 30, என்பவர் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.கொத்தனரான கருணாகரன், முத்தியால் பேட்டையில் வீடு கட்டுமான பணி செய்தபோது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு, கடத்திச் சென்றது தெரிந்தது.

கருணாகரனை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் புதுச்சேரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, நீதிபதி செல்வநாதன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட கருணாகரனுக்கு 'போக்சோ' பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம், கடத்தல் பிரிவின் கீழ் ஏழு ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X