வாரிசுகளை வளர்ப்பதில்முதல்வர், அமைச்சர்கள் கவனம் :பா.ஜ., வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

Added : செப் 07, 2022 | |
Advertisement
வத்தலக்குண்டு:''தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை வாரிசுகளை வளர்ப்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்,'' என பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பா.ஜ.,வினரால் கலவரம் வெடிக்கும் என போலீஸ் மூலம் மக்களை தி.மு.க.,வினர் பீதியடைய செய்தனர்.

வத்தலக்குண்டு:''தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை வாரிசுகளை வளர்ப்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்,'' என பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பா.ஜ.,வினரால் கலவரம் வெடிக்கும் என போலீஸ் மூலம் மக்களை தி.மு.க.,வினர் பீதியடைய செய்தனர். ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் தலைமையில் ஊர்வலம் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. ஜி.எஸ்.டி., நிதி வழங்கவில்லை என உண்மைக்கு புறம்பான தகவலை கூறி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி., காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் அதிக நிதியை பா.ஜ.,ஒதுக்கி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கணக்கீடு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின். ஆனால் தற்போது மின்கட்டணத்தை உயர்த்துவதில் கவனமாக உள்ளனர். 'டாஸ்மாக்' கடை குறைக்கப்படும் என்றார். ஆனால் மதுரையை போன்ற கோயில் நகரங்களில் சந்து, சந்தாக டாஸ்மாக் கடை திறக்கின்றனர். இதுதான் சொல்வதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற முழக்கம் போலும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியசாமி அமைச்சராக உள்ளார். அவரது மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அடுத்து பேரன் தயாராகி வருகிறார். முதல்வர் போன்று தங்கள் வாரிசுகளை வளர்ப்பதில் அமைச்சர்களும் கவனமாக உள்ளனர். பா.ஜ.,வை பொறுத்தவரை சாமானிய தொண்டனும் நிர்வாகத்திற்கு வருவார். திண்டுக்கல் மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கு அப்பாவிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களை ஸ்டாலின் மருமகன் சபரீசன் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்.

பா.ஜ.,திட்டங்கள் 35 சதவீத சிறுபான்மை மக்களை சென்றடைந்துள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ., கூறியது. தற்போது அந்த வேலையை காங்கிரசை சேர்ந்த ராகுல் கச்சிதமாக செய்து வருகிறார். அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடத்தப் போகும் நடை பயணத்துக்குள் காங்., கூடாரமே காலியாகிவிடும் என அக்கட்சியினரே கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X