144 லோக்சபா தொகுதிகளுக்கு பா.ஜ., குறி! புதுடில்லியில் துவங்கியது ஆலோசனை-

Added : செப் 07, 2022 | |
Advertisement
கடந்த லோக்சபா தேர்தல்களில், மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற, 144 தொகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை பா.ஜ., மேலிடம் வகுத்து வருகிறது. இதற்கான ஆலோசனை, புதுடில்லியில் துவங்கியுள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலில், 'ஹாட்ரிக்' வெற்றி பெற வேண்டுமென, பா.ஜ., மேலிடம் உறுதி பூண்டுள்ளது. இதற்காக, பல்வேறு யோசனைகள், திட்டங்கள், வியூகங்களை வகுக்க,
144 லோக்சபா தொகுதிகள், பா.ஜ., குறி   புதுடில்லி,

கடந்த லோக்சபா தேர்தல்களில், மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற, 144 தொகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை பா.ஜ., மேலிடம் வகுத்து வருகிறது. இதற்கான ஆலோசனை, புதுடில்லியில் துவங்கியுள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலில், 'ஹாட்ரிக்' வெற்றி பெற வேண்டுமென, பா.ஜ., மேலிடம் உறுதி பூண்டுள்ளது. இதற்காக, பல்வேறு யோசனைகள், திட்டங்கள், வியூகங்களை வகுக்க, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முனைப்பாக உள்ளனர்.இதையடுத்து, தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதிகள் அல்லது வலுவான தொகுதிகளை தவிர்த்து, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள் அல்லது கடந்த தேர்தல்களில், மிக குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகள் மீது கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுதும், 144 லோக்சபா தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தான், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் இலக்கு. இந்த தொகுதிகளில் கணிசமான வெற்றியைப் பெற்று விட்டாலே, பெரும்பான்மை பலத்திற்கு தேவையான எண்ணிக்கை உறுதியாக கிடைத்து விடும் என, மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.இவற்றில், இரண்டு, மூன்று தொகுதிகளை ஒன்றிணைத்து, ஒரு 'கிளஸ்டராக' மாற்றப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஒரு மூத்த தலைவர் அல்லது மத்திய அமைச்சர் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.இவரது வேலையே, இந்த கிளஸ்டருக்கு நேரடியாக சென்று, சில நாட்களாவது தங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் உரையாட வேண்டும்.அன்றாட பணிக்குச் செல்வதுபோல, இந்த தலைவர்கள் மதிய உணவை கையோடு எடுத்துச் சென்று, நிர்வாகிகள், பொதுமக்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.இந்த வித்தியாசமான அணுகுமுறையுடன், கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் சுற்றுப்பயணங்கள், முடிவுக்கு வந்துள்ளன. இந்த கள நிலவர அறிக்கையை, கடந்த மாதம் 31க்குள், புதுடில்லி மேலிடத்திடம் தர வேண்டுமென, பொறுப்பாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.இதன்படி, மூத்த மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, தர்மேந்திர பிரதான், நரேந்திரசிங் தோமர், பியுஷ் கோயல், புபீந்தர் யாதவ், அனுராக் தாக்கூர், மகேந்திர பாண்டே மற்றும் மூத்த நிர்வாகிகள் என, 15 பேரிடம் இந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிளஸ்டர்களுக்கு, நேரடியாகவே சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்து தயாரித்துள்ள அறிக்கைகள், புதுடில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளன.இந்த அறிக்கையில், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிஜ கள நிலவரம் உள்ளது. அங்குள்ள பிரச்னைகள் என்ன, அவற்றை எப்படி அணுகுவது, அவற்றுக்கான தீர்வுகள் என்ன போன்ற விஷயங்கள் இவற்றில் அடங்கியுள்ளன.மேலும், வரும் லோக்சபா தேர்தலில், வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்த பரிந்துரைகளும் உள்ளன. இந்த அறிக்கை மீதான ஆலோசனையை, தாமதம் இன்றி துவங்க, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்புப் பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், இணை அமைப்புச் செயலர் சதீஷ் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று ஆலோசனையை துவக்கிவிட்டது.இதையடுத்து, 2024 தேர்தலுக்கு முன், இந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஒரு திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதில் குறிப்பிடப்படும் வியூகங்களின் அடிப்படையில், வெற்றிக்குத் தேவையான களப்பணிகளை மேற்கொள்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெகு விரைவில் வெளியாகுமென, பா.ஜ., மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது டில்லி நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X