சூப்பர் ரிப்போர்ட்டர்

Added : செப் 07, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : முறையான தார் ரோடு இல்லை, வாறுகால் இல்லை, மாதம் இருமுறை குடிநீர் சப்ளை, சகதியால் அவதி என பல்வேறு சிரமங்களில் சிக்கி தவித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் என் ஆர் நகர் பொதுமக்கள்.ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் நீதிமன்றம் அருகில், புற்றுக் கோயில் எதிர்புறம் அத்திக்குளம் செங்குளம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஆர் நகர்
சூப்பர் ரிப்போர்ட்டர்

ஸ்ரீவில்லிபுத்தூர் : முறையான தார் ரோடு இல்லை, வாறுகால் இல்லை, மாதம் இருமுறை குடிநீர் சப்ளை, சகதியால் அவதி என பல்வேறு சிரமங்களில் சிக்கி தவித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் என் ஆர் நகர் பொதுமக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் நீதிமன்றம் அருகில், புற்றுக் கோயில் எதிர்புறம் அத்திக்குளம் செங்குளம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஆர் நகர் அமைந்துள்ளது. இங்கு கடந்த 12 வருடங்களுக்கு மேலாகவே குடியிருப்புகள் வரத் துவங்கி உள்ள நிலையில், தற்போது வரை நாளுக்கு நாள் வீடுகள் கட்டுவது அதிகரித்து வருகிறது.

தற்போது இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், முறையான தார் ரோடு இல்லாததால், லேசான மழை பெய்தாலே சகதி ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முதியவர்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.முறையான சாக்கடை வாறுகால் கட்டி தரப்படாததால் கழிவு நீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது.குடியிருப்பு பகுதி நுழையும் பகுதியில் மெயின் ரோட்டினை இணைக்கும் பாலம் உயரமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பாலத்தில் ஏறி இறங்குமிடத்தில் சரிவான சிமெண்ட் தளம் அமைக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள இக்குடியிருப்பின் நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து, புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாலை நேரங்களில் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது.

இவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இப்பகுதி பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், அடிப்படை குறைபாடுகளை சரி செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், இதுவரை எதுவும் சரி செய்யப்படவில்லை என்பது இப்போது மக்களின் வேதனையாகும்.


குடிநீர் பற்றாக்குறை


அழகர்சாமி, ஓய்வு அரசு பஸ் டிரைவர்: இங்கு 12 வருடமாக குடியிருந்து வருகிறேன். மாதத்தில் இருமுறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இதனால் குடிநீர் விலை கொடுத்து வாங்கும் நிலை பல மாதங்களாக நீடிக்கிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.


சகதியால் அவதி


-ஆனந்த், தனியார் ஊழியர்: குடியிருப்புகள் அதிகரித்து வரும் இப்பகுதியில் முறையான தார் ரோடு, பேவர்பிளாக் ரோடு அமைக்கப்படாததால் மழை பெய்தால் சகதி ஏற்பட்டு நடந்து செல்ல முடியவில்லை. டூவீலரில் வந்தால் சறுக்கி விழவேண்டி உள்ளது. எனவே, உடனடியாக ரோடு வசதி செய்து தர வேண்டும்.


சுகாதாரக்கேடு


கிருஷ்ணகுமார், சுய தொழில் முனைவோர்: இங்கு முறையான ரோடு, வாறுகால் வசதி இல்லாததால் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. குழந்தைகள், முதியவர்கள் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, அடிப்படை வசதிகளை காலதாமதம் இன்றி செய்து தர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X