பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை| Dinamalar

பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறை

Added : செப் 07, 2022 | |
கோவை:பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில், ஜவுளிக்கடை ஊழியருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.துாத்துக்குடி அருகேயுள்ள கூட்டம்புள்ளி, போதம்மாள் புரத்தை சேர்ந்தவர் அன்புவேல், 33. கோவையில் ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.அதே கடையில் வேலை செய்த 22 வயது பெண் ஊழியர், 2021 இரவில் பணிமுடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ஜவுளிக்கடை வராண்டாவில்

கோவை:பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில், ஜவுளிக்கடை ஊழியருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

துாத்துக்குடி அருகேயுள்ள கூட்டம்புள்ளி, போதம்மாள் புரத்தை சேர்ந்தவர் அன்புவேல், 33. கோவையில் ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.அதே கடையில் வேலை செய்த 22 வயது பெண் ஊழியர், 2021 இரவில் பணிமுடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ஜவுளிக்கடை வராண்டாவில் காத்திருந்தார்.

தனியாக இருந்த அந்த பெண்ணின் வாயை பொத்தி துாக்கிச் சென்ற அன்புவேல், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.அந்த பெண்ணின் தந்தை வந்தது அறிந்து, அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

புலியகுளம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் படி, அன்புவேலுவை போலீசார் கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, குற்றம் சாட்டப்பட்ட அன்புவேலுவிற்கு, 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X