பள்ளிக்கு 4 கி.மீ., நடை பயணம்; மழைக்காலங்களில் அல்லல்; கலெக்டரிடம் நேரில் முறையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

Added : செப் 07, 2022 | |
Advertisement
விருதுநகர் : காரியாபட்டி ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பந்தனேந்தல் பகுதி மாணவர்களுக்கு பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் 4 கி.மீ., துாரம் நடை பயணம் மேற்கொள்வதுடன், மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தையும் சந்திக்கின்றனர்.காரியாபட்டி ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று
பள்ளிக்கு 4 கி.மீ., நடை பயணம்; மழைக்காலங்களில் அல்லல்; கலெக்டரிடம் நேரில் முறையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்

விருதுநகர் : காரியாபட்டி ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பந்தனேந்தல் பகுதி மாணவர்களுக்கு பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் 4 கி.மீ., துாரம் நடை பயணம் மேற்கொள்வதுடன், மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தையும் சந்திக்கின்றனர்.

காரியாபட்டி ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பக்கத்து ஊரான பந்தனேந்தலில் இருந்து 40 மாணவர்கள் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கின்றனர். இவர்களுக்கு பஸ் வசதியே இல்லாததால் தினமும் 4 கி.மீ., நடைபயணம் நடக்க வேண்டி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.

எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் மாணவர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஜூலையில் ஓரிரு நாட்கள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் கைவிடப்பட்டது.இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் பஸ்களை இயக்க வலியுறுத்தி நேற்று காலை 10:30 மணிக்கு பள்ளி நேரத்தில் சீருடையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாணவர்கள் கலெக்டரை நேரில் பார்த்து முறையிட வேண்டும் என்று கோரினர்.

இந்நிலையில் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் கூறுகையில், "தாங்கள் தினசரி 4 கி.மீ., வரை நடந்தே பள்ளிக்கு செல்கிறோம். விருதுநகரில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டிக்கு காலை 10:30 மணிக்கும், திருச்சுழியில் இருந்து விருதுநகருக்கு மதியம் 3:30 மணிக்கும் ஜோகில்பட்டி வழியாக பஸ் உள்ளது. இதை காலை 8:30 மணிக்கும், மாலை 4:30 மணிக்கும் இயக்கினால் எங்களால் பள்ளிக்கு சென்று வர முடியும். மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்," என்றனர்.

கலெக்டர் மேகநாதரெட்டி கூறுகையில், "மாணவர்களுக்கு தேவைப்படும் வகையில் ஜோகில்பட்டி வழியாக பஸ்களை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருங்கிணைப்பில் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய முடிவுகளை எடுத்து பஸ்களை இயக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இரு நாட்களில் பஸ்கள் இயக்கப்படும்," என்றார்.

கலெக்டர் உறுதி அளித்த நிலையில் சமாதானம் அடைந்த மாணவர்களை தனியார் பள்ளி பஸ்சில் ஏற்றி ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X