நகராட்சிகளில் புதிய வீட்டு வரி விதிப்பு செய்யாததால் தவிப்பு

Added : செப் 07, 2022 | |
Advertisement
கம்பம் : மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் புதிதாக வீட்டு வரி செலுத்த முடியாத நிலையால் புதிதாக வீடு கட்டுபவர்கள் மின், குடிநீர் இணைப்பு பெற முடியாத நிலை உள்ளது.நகராட்சி, பேரூராட்சிகளில் வீட்டு வரி உயர்வு செய்ய அரசு உத்தரவிட்டது. குடியிருப்புகள் தகரம், ஆர்.சி. கூரை வீடுகள் என வகைப்படுத்தி சதுர அடியகா பிரித்து வரி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஏற்கெனவே வரி

கம்பம் : மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் புதிதாக வீட்டு வரி செலுத்த முடியாத நிலையால் புதிதாக வீடு கட்டுபவர்கள் மின், குடிநீர் இணைப்பு பெற முடியாத நிலை உள்ளது.

நகராட்சி, பேரூராட்சிகளில் வீட்டு வரி உயர்வு செய்ய அரசு உத்தரவிட்டது. குடியிருப்புகள் தகரம், ஆர்.சி. கூரை வீடுகள் என வகைப்படுத்தி சதுர அடியகா பிரித்து வரி உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஏற்கெனவே வரி செலுத்துபவர்களிடம் வரி வசூல் பணி நடைபெறுகிறது. ஆனால் புதிதாக வீடு கட்டியவர்கள் வீட்டுவரி விதிக்க கோரினால் நகராட்சிகளில் வரி செலுத்த முடியவில்லை.

இது குறித்து விளக்கம் கோரினால் நகராட்சிகளின் இயக்குனரகத்தில் புதிய வரிவிதிப்பிற்கான அனுமதி இன்னும் வழங்கவில்லை என்கின்றனர். இந்த நிலை கடந்த 2022 ஏப்ரல் முதல் நீடிக்கிறது. இதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் மின் இணைப்பு பெறுவது, குடிநீர் இணைப்பு பெறுவது,வங்கி கடன் பெறுவது உள்ளிட்ட எந்த பணியும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு நகராட்சிகளிலும் புதிய வரிவிதிப்பு செய்ய கோரி நுாற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், " வீட்டு வரி உயர்வு செய்து அதன் விபர பட்டியல் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்லது. ஆனால் புதிய வரி நிர்ணயிப்பதற்கான சாப்ட்வேர் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. சாப்டுவேர் செயல்பாட்டிற்கு வந்த பின்பு தான் வரி செலுத்த முடியும்" என்கின்றனர்.

இதனால் நகராட்சிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. விரைவில் புதிய வரி நிர்ணயத்திற்கான அனுமதி வழங்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X