உபகரணங்கள் பெற குவிந்த தொழிலாளர்கள்; தள்ளுமுள்ளு

Added : செப் 07, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : ''திண்டுக்கல் தொழிலாளர் நல அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் பெற தொழிலாளர்கள் குவிந்ததால்,போலீசார் தொழிலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாக தகவல் பரவிய நிலையில், மாவட்டத்தின் அனைத்து பகுதி தொழிலாளர்களும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக தொழிலாளர் நல
உபகரணங்கள் பெற குவிந்த தொழிலாளர்கள்; தள்ளுமுள்ளு

திண்டுக்கல் : ''திண்டுக்கல் தொழிலாளர் நல அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் பெற தொழிலாளர்கள் குவிந்ததால்,போலீசார் தொழிலாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாக தகவல் பரவிய நிலையில், மாவட்டத்தின் அனைத்து பகுதி தொழிலாளர்களும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக தொழிலாளர் நல அலுவலகத்தில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக தொழிலாளர் நல அலுவலர்கள், 'தாலுகா வாரியாக மற்றொரு நாள் உபகரணங்கள் வழங்கம்படும் ,' என்றனர். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்நலதுறை உதவி ஆணையர் சிவசிந்து பேச்சு வார்தை நடத்தியதோடு,' அனைவரும் வரிசையில் நின்றால் வழங்குவதாக கூறினார். பலர் வரிசையில் நிற்காமல் நுழைவாயில் பகுதியில் கூச்சலிட்டவாறு முன்னேறினர் .அவர்களை தடுக்க முற்பட்டபோது போலீசாருக்கும் தொழிலாளர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதனிடையே ஒரு சிலருக்கு மட்டும்உபகரணங்கள் கொடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

கட்டுமான தொழிலாளர் சங்க துணைத் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில்,'' முறையான முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. பலர்வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து வந்துள்ளனர். அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிக்கின்றனர்,''என்றார்.

தொழிலாளர் நலதுறை உதவி ஆணையர் சிவசிந்து கூறுகையில்,''கட்டட தொழிலாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 100 பேருக்கு மட்டும் வழங்க அழைக்கப்பட்டனர். தவறான தகவல் பரவியதால் அனைவரும் வந்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில்மீண்டும் வழங்கப்படும்,என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X