மழையால் மறுகால் பாய்ந்த பாலமேடு சாத்தையாறு அணை

Added : செப் 07, 2022 | |
Advertisement
பாலமேடு : பாலமேடு சாத்தையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலையில் பெய்துவரும் மழையால் அணை நேற்று காலை முதல் மறுகால் பாய்கிறது.சமீபத்திய மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி மொத்த கொள்ளளவு 29 அடியில் 25.5 அடியாக இருந்தது. திண்டுக்கல் சிறுமலையில் இரவு பெய்த கன மழையால் 134 கன அடி நீர் வந்ததால் அணைநீர் ஓடையில் மறுகால் பாய்ந்தோடியது.
மழையால் மறுகால் பாய்ந்த பாலமேடு சாத்தையாறு அணை

பாலமேடு : பாலமேடு சாத்தையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலையில் பெய்துவரும் மழையால் அணை நேற்று காலை முதல் மறுகால் பாய்கிறது.

சமீபத்திய மழையால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி மொத்த கொள்ளளவு 29 அடியில் 25.5 அடியாக இருந்தது. திண்டுக்கல் சிறுமலையில் இரவு பெய்த கன மழையால் 134 கன அடி நீர் வந்ததால் அணைநீர் ஓடையில் மறுகால் பாய்ந்தோடியது. நேற்று மாலை 35 கன அடி வரத்து நீர் வெளியேறியது. பாசன வசதிபெறும் 10 கண்மாய்களில் முதற்கட்டமாக கீழச்சின்னம்பட்டி, எர்ரம்பட்டி, சுக்காம்பட்டிக்கும், தொடர்ந்து மற்ற கண்மாய்களுக்கு பொதுப்பணித் துறை மூலம் முறை வைத்து நீர் திருப்பப்பட உள்ளது.

செயற்பொறியாளர் அன்புசெல்வம், உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப், உதவி பொறியாளர் ராஜ்குமார், பாசன ஆய்வாளர் தியாகராஜன் அணையை ஆய்வு செய்தனர். ''பாசனத்திற்கு அணையை திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு முடிவு செய்யப்படும்'' என தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X