5,000 கார்கள் திருடியபலே திருடன் சிக்கினான்

Added : செப் 07, 2022 | |
Advertisement
புதுடில்லி:நாடு முழுதும் 27 ஆண்டுகளாக கார் திருடிய கில்லாடி திருடனை டில்லி போலீசார் கைது செய்தனர். இதுவரை, 5,000 கார்களை திருடியுள்ள அவர் சமீபகாலமாக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதும், சில கொலைகளை செய்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மத்திய டில்லி போலீசுக்கு, ஆயுதக் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில்

புதுடில்லி:நாடு முழுதும் 27 ஆண்டுகளாக கார் திருடிய கில்லாடி திருடனை டில்லி போலீசார் கைது செய்தனர். இதுவரை, 5,000 கார்களை திருடியுள்ள அவர் சமீபகாலமாக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதும், சில கொலைகளை செய்துள்ளதும்

முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மத்திய டில்லி போலீசுக்கு, ஆயுதக் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, புதுடில்லியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அனில் சவுகான்,52, என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து, டில்லி போலீசார் கூறியதாவது:புதுடில்லியில் ஆட்டோ ஓட்டி வந்த அனில் சவுகான், 1995ல் கார்களை திருடி விற்க துவங்கியுள்ளார். இதில் கிடைத்த பணத்தில், டில்லி, மும்பை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.

மூன்று பெண்களை திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கார்களை திருடும் போது சில டிரைவர்களை கொலை செய்துள்ளார். அவர், இதுவரை 5,000 கார்களை திருடியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சமீபகாலமாக, உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி வடகிழக்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பினருக்கு சப்ளை செய்து சம்பாதித்து வந்தார்.

அவருக்கு பயங்கரவாத அமைப்பினருடன் இருக்கும் தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள அனில் மீது 180 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X