நில மோசடி வழக்கில் இருவருக்கு மூன்றாண்டு

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருமங்கலம் : திருமங்கலத்தில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன், தனது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் தனக்கன்குளத்தில் 2010 ஆம் ஆண்டு ரூ. 37 லட்சம் மதிப்பில் 4.64 ஏக்கர் இடம் வாங்கியுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த

திருமங்கலம் : திருமங்கலத்தில் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன், தனது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் தனக்கன்குளத்தில் 2010 ஆம் ஆண்டு ரூ. 37 லட்சம் மதிப்பில் 4.64 ஏக்கர் இடம் வாங்கியுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இந்த இடத்தை மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பஞ்சவர்ணம் 50, அவரது மகன் பாண்டி கண்ணன் 22, விற்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து சீனிவாசன் 2011 ஆம் ஆண்டு ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் அளித்தார். பஞ்சவர்ணம், பாண்டி கண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்தனர்.

இது குறித்த வழக்கு திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் நடந்து வந்தது. நீதிபதி சண்முகராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில் பஞ்சவர்ணம், பாண்டி கண்ணன் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகராஜன் தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X