மேலூர் குறுவட்ட தடகளப் போட்டிகள்: மகாத்மா, மேலூர் அரசு பள்ளி சாம்பியன்

Added : செப் 07, 2022 | |
Advertisement
மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நேற்று நடந்த மேலுார் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகளில் ஆடவர் பிரிவில் அழகர்கோவில் மகாத்மா பள்ளி, மகளிர் பிரிவில் மேலுார் அரசுப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றன.தொடக்க விழாவில் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருணாச் சலம் வரவேற்றார்.முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தேசிய கொடி, மேலுார் மாவட்ட
மேலூர் குறுவட்ட தடகளப் போட்டிகள்: மகாத்மா, மேலூர் அரசு பள்ளி சாம்பியன்

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் நேற்று நடந்த மேலுார் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகளில் ஆடவர் பிரிவில் அழகர்கோவில் மகாத்மா பள்ளி, மகளிர் பிரிவில் மேலுார் அரசுப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றன.

தொடக்க விழாவில் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருணாச் சலம் வரவேற்றார்.முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தேசிய கொடி, மேலுார் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஒலிம்பிக் கொடி, உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் கல்வி மாவட்ட கொடியை ஏற்றினர். உடற்கல்வி ஆசிரியர்கள் கீதா, செல்வபாண்டி ஏற்பாடுகளை செய்தனர்.

14 வயது ஆடவர் பிரிவில் மேலூர் அல்அமீன் உருது பள்ளி மாணவர் குத்திக் நந்தன், 17 வயது பிரிவில் மேலுார் எஸ்.எஸ்.வி. சாலா பள்ளி மாணவர் கார்த்திக், 19 வயது பிரிவில் அழகர்கோவில் மகாத்மா பள்ளி மாணவர்கள் வெங்கடேசன் மற்றும் யோகேஷ் ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.அழகர்கோவில் மகாத்மா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

14 வயது மகளிர் பிரிவில் மேலூர் தமிழரசி நடுநிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி, 17 வயது பிரிவில் சருகுவலையபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, 19 வயது பிரிவில் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். மேலுார் அரசுப் பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X