சி.பி.சி.ஐ.டி., முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட கோருவதா

Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை:போலீஸ் துறையின் இணையதளத்தில் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிடக் கோரிய வழக்கை வாபஸ் பெற்றதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனு:உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் துறையின் இணையதளங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால்

சென்னை:போலீஸ் துறையின் இணையதளத்தில் சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிடக் கோரிய வழக்கை வாபஸ் பெற்றதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனு:உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் துறையின் இணையதளங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் சி.பி.சி.ஐ.டி. பிரிவு பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இதனால் அதன் விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
எனவே சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமார் ''போலீஸ் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கைகளை மட்டுமே இணையதளத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முக்கிய வழக்குகளை கையாளும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிட்டால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை வெளியிடுவதில்லை'' என்றார்.
இதையடுத்து இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் எனக்கூறிய முதல் பெஞ்ச் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தது. அதைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கும்படி மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொண்டதை ஏற்று அதை தள்ளுபடி செய்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X