இருள் சூழ்ந்த பகுதிகளில் ரூ.33 கோடியில் மின் விளக்குகள் வெளி்ச்சம் !'நிர்பயா' திட்டத்தில் அமைக்கிறது சென்னை மாநகராட்சி

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சியில், விடுபட்ட பகுதிகளில் 33.57 கோடி ரூபாய் மதிப்பில், 5,594 தெரு விளக்கு மின் கம்பங்கள், 85 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இருள் சூழ்ந்த பகுதிகளில், நிர்பயா திட்டத்தின் கீழ் வெளிச்சம் அளிக்கப்படும் எனவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. நிர்வாக நலன் கருதி, 200 வார்டுகளைக் கொண்ட 15 மண்டலங்களாக
இருள் சூழ்ந்த பகுதிகளில் ரூ.33 கோடியில் மின் விளக்குகள் வெளி்ச்சம் !'நிர்பயா' திட்டத்தில் அமைக்கிறது சென்னை மாநகராட்சி

சென்னை : சென்னை மாநகராட்சியில், விடுபட்ட பகுதிகளில் 33.57 கோடி ரூபாய் மதிப்பில், 5,594 தெரு விளக்கு மின் கம்பங்கள், 85 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
இருள் சூழ்ந்த பகுதிகளில், நிர்பயா திட்டத்தின் கீழ் வெளிச்சம் அளிக்கப்படும் எனவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி, 426 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. நிர்வாக நலன் கருதி, 200 வார்டுகளைக் கொண்ட 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளுக்காக 5,657 கி.மீ., நீளத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.


தீர்வு



சென்னை மாநகராட்சியின் மின்துறையின் வாயிலாக, பேருந்து தடம் மற்றும் உட்புற சாலைகளில், ௨ லட்சத்து, 91 ஆயிரத்து, 335 தெரு விளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பல பகுதிகளில் தெரு மின் விளக்குகள் இல்லாமல், இருள் சூழ்ந்த நிலையே தொடர்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், 'விடுபட்ட மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளில், காவல் துறை பரிந்துரைப்படி மின் விளக்குகள் அமைக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சட்டசபையில் அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, '33.57 கோடி ரூபாய் செலவில், சென்னையில் மின் விளக்குகள் அமைக்கப்படும்' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகள், காவல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட பகுதிகள், போதிய வெளிச்சம் இல்லாத பகுதிகளில், பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் கீழ் மின் விளக்குகள் அமைக்கப்படுகின்றன.


பணிகள் வேகம்



இதில், 33.57 கோடி ரூபாய் மதிப்பில், 5,594 புதிய தெரு விளக்கு மின் கம்பங்களும், 85 உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்க, ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல், விடுபட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, மின் சேமிப்பு எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.


latest tamil news




அதன்படி, 2011ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், நிர்பயா திட்டத்தின் கீழ், 4.82 கோடி ரூபாய் மதிப்பில், 1,104 எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், காவல் துறை சார்பில், மாநகரில் பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்ட இடங்களில், 696 எல்.இ.டி., தெருவிளக்குகளும், 49 உயர் கோபுர எல்.இ.டி., மின் விளக்குகளும் அமைக்கும் பணி, 6.01 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறுகிறது.
அதேபோல், பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை அடிப்படையில், 3,794 தெரு விளக்கு மின் கம்பங்கள், 36 உயர் கோபுர கம்பங்கள், நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகின்றன.
மேலும், மிகவும் துருப்பிடித்த, உயரம் குறைவான, 1,997 தெரு விளக்கு மின்கம்பங்கள், நிர்பயா திட்டத்தின் கீழ், 7.53 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றி அமைக்கப்பட உள்ளன.
அனைத்து பகுதிகளிலும், மின் கம்பங்கள் அமைக்கும் பணி விரைந்து நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X