கோவையில் மூவருக்கு மாநில விளையாட்டு விருது

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோவை : நேற்று அறிவிக்கப்பட்ட மாநில விளையாட்டு விருதுகள் பட்டியலில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இருவர் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என மூவருக்கு, விருது அறிவிக்கப்பட்டுள்ளது.விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு ரூ 16.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. 2018, 2019, 2020 ஆண்டுகளுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், சிறந்த
கோவையில் மூவருக்கு மாநில விளையாட்டு விருது



கோவை : நேற்று அறிவிக்கப்பட்ட மாநில விளையாட்டு விருதுகள் பட்டியலில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் இருவர் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என மூவருக்கு, விருது அறிவிக்கப்பட்டுள்ளது.விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசு ரூ 16.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.

2018, 2019, 2020 ஆண்டுகளுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு விருதுகளுக்கான மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு, நேற்று பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த தடகளப்பயிற்சியாளர் முகமது நிஜாமுதீன், துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சத்குரு ஆகியோருக்கு, சிறந்த பயிற்சியாளருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நிஜாமுதீன், 1998ம் ஆண்டு முதல் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சத்குரு, இந்திய அணியின் பயிற்சியாளராக பல்வேறு சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கோவையை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஸ்ரீ நிவேதா இந்தியா சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று நாட்டிற்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இவருக்கு, மாநில சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X