குறைபிரசவ குழந்தைகளின் தாய்களுக்கு யோகா பயிற்சி

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோவை : குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு மன அழுத்தம் போக்க, கோவை அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.மையத்தை திறந்து வைத்த, மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிக்க, 1 அல்லது, 2 மாதம் ஆகலாம். குழந்தைகளுடன் தாய்மார்களும் மருத்துவமனையில் இருக்க வேண்டும். பல்வேறு நோய்களால்



கோவை : குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு மன அழுத்தம் போக்க, கோவை அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.மையத்தை திறந்து வைத்த, மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிக்க, 1 அல்லது, 2 மாதம் ஆகலாம். குழந்தைகளுடன் தாய்மார்களும் மருத்துவமனையில் இருக்க வேண்டும். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெறும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மனஅழுத்தம் போக்க, யோகா பயிற்சி மையம் துவக்கப்பட்டது.

தினமும் மூச்சு பயிற்சி, யோகாசன பயிற்சி அளிக்கப்படும். மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, சிறிய பூங்காவில் தண்ணீர் தெளிக்கும் பணி மேற்கொள்ளலாம். தாய்மார்களுக்கான அறையில், 'டிவி' வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் மனஅழுத்தம் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.குழந்தைகள் சிகிச்சை பிரிவு தலைவர் கீதாஞ்சலி, இணை பேராசிரியர் சசிக்குமார், யோகா பயிற்சியாளர் புவனேஸ்வரி மற்றும் செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X