வீடுகள் மீது விழும் தென்னை மரங்கள் நடவடிக்கை எடுக்க பழங்குடியினர் மனு| Dinamalar

வீடுகள் மீது விழும் தென்னை மரங்கள் நடவடிக்கை எடுக்க பழங்குடியினர் மனு

Added : செப் 07, 2022 | |
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, காளியாபுரம் ஊராட்சி முதலியார்பதி பழங்குடியின மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:முதலியார்பதியில், 24 மலசர், 40 இரவாளர் பழங்குடியின குடும்பங்கள் வசிக்கிறோம். குடியிருப்பு அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்துள்ளன.கடந்த, 2005ம் ஆண்டு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில், அரசு
வீடுகள் மீது விழும் தென்னை மரங்கள்  நடவடிக்கை எடுக்க பழங்குடியினர் மனு



பொள்ளாச்சி : பொள்ளாச்சி, காளியாபுரம் ஊராட்சி முதலியார்பதி பழங்குடியின மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:முதலியார்பதியில், 24 மலசர், 40 இரவாளர் பழங்குடியின குடும்பங்கள் வசிக்கிறோம். குடியிருப்பு அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை மரங்கள் உயரமாக வளர்ந்துள்ளன.கடந்த, 2005ம் ஆண்டு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில், அரசு கட்டித்தந்த வீடுகள் வரை ஆக்கிரமித்து தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்.வீட்டின் மேற்கூரைக்கு நேர் மேலே தென்னை மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.



அடிக்கடி தென்னை ஓலை, தேங்காய்கள் வீட்டுக்குள்ளே விழுவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த இரு ஆண்டுக்கு முன், மாரியம்மாள் வீட்டின் மீது தென்னை மரம் அடியோடு சாய்ந்து, வீடு சேதமானது. சப் - கலெக்டரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தன் பேரில், சம்பந்தப்பட்ட நபர், தென்னை மரங்களை இழுத்துக்கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். சில மரங்களை இழுத்து கட்டினார். இதனால், எவ்வித பலனும் இல்லை.தற்போது, கனமழை, காற்று வீசுவதால் மரங்கள் குடியிருப்பின் மீது எந்த நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. மரங்களை அப்புறப்படுத்த கூறினால், மிரட்டுகின்றனர்.எனவே, வீட்டிற்கு மேலாக வளர்ந்துள்ள தென்னை மரங்களை அப்புறப்படுத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X