குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோவை : டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில், 'குளூக்கோமீட்டர்' மற்றும் 'குளூக்கோஸ்ட்ரிப்ஸ்' வழங்கும் விழா நடந்தது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சர்க்கரை நோயால்



கோவை : டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில், 'குளூக்கோமீட்டர்' மற்றும் 'குளூக்கோஸ்ட்ரிப்ஸ்' வழங்கும் விழா நடந்தது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, 66 குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

பின்னர், இதயங்கள் அறங்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, நான்கு வேளை இன்சுலின் ஊசி கட்டாயம் செலுத்த வேண்டும். ஒரு வேளை இன்சுலின் செலுத்தவில்லை என்றால், கோமா நிலை, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் மூன்று முறையாவது, சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. இதனால், வசதியற்ற ஏழை குழந்தைகளுக்கு, குளூக்கோமீட்டர் வழங்குவது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு 20 வயது ஆகும் வரை, மாதத்திற்கு 50 குளூக்கோஸ்ட்ரிப்சும் வழங்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த எல்.எப்.ஏ.சி., நிறுவனம் மற்றும் பெங்களூருவை சேர்ந்த, ஆர்.பி.எல்., அமைப்புகள் இதற்கான, நிதி உதவி வழங்கி வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.மருத்துவமனை டீன் நிர்மலா, குழந்தைகள் நலப்பிரிவின் தலைவர் கீதாஞ்சலி, இசட்.எப்., நிறுவனத்தின் கோவை மேலாளர் தீபக், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X