ஆதார் மையம் மூடப்பட்டதால் ஏமாற்றம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் அவதி

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர், : திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையம் மூடப்பட்டதால், பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும், திருப்பூர் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டது. கடந்த, 2014 முதல், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என பிரிக்கப்பட்டது.தாலுகா பிரிப்பில், பொதுமக்கள் நலன் குறித்து மாவட்ட
ஆதார் மையம் மூடப்பட்டதால் ஏமாற்றம்  தெற்கு தாலுகா அலுவலகத்தில் அவதி



திருப்பூர், : திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இயங்கும் ஆதார் மையம் மூடப்பட்டதால், பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும், திருப்பூர் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டது. கடந்த, 2014 முதல், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என பிரிக்கப்பட்டது.தாலுகா பிரிப்பில், பொதுமக்கள் நலன் குறித்து மாவட்ட நிர்வாகம் சிந்திக்கவே இல்லை; அதிகாரிகளின் சவுகரியத்தை மட்டுமே சிந்தித்தனர். 'டாலர் சிட்டி' நகருக்குள் அமைந்திருந்தாலும் கூட, போதிய பஸ் வசதியில்லாத, யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டது.தாலுகா மையத்தில் அலுவலகம் அமையாததால், இந்த தாலுகாவில் இருந்து தங்களை மீண்டும் வடக்கு தாலுகாவுடன் இணைக்க வேண்டுமென, மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய் வருவாய் கிராமத்தினர், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக சேவையை, அருகே உள்ள சில கிராம மக்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு இயங்கி வந்த ஆதார் மையம் திடீரென மூடப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் வந்துசெல்வது குறைவு என்பதால், ஆதார் மையம் குறைவான கூட்டத்துடன் இருக்கும். அதற்காகவே, அருகே உள்ள மக்கள், இந்த ஆதார் மையத்தை பயன்படுத்தி வருகிறோம்.முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென மூடப்பட்டதால், கலெக்டர் அலுவலகம் அல்லது திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மீண்டும் ஆதார் மையத்தை திறந்து செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.'டாலர் சிட்டி' நகருக்குள் அமைந்திருந்தாலும் கூட, போதிய பஸ் வசதியில்லாத, யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் தாலுகா அலுவலகம் அமைக்கப்பட்டது


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X