சாமளாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டமா?

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : சாமளாபுரம் குளம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாமளாபுரம் பெரிய குளத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் சிறுத்தை கடந்து சென்றதாக அவ்வழியாக வந்த ஒருவர் தகவல் அளித்தார்.இது குறித்து, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமிக்கு,


திருப்பூர் : சாமளாபுரம் குளம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.திருப்பூர் அருகே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாமளாபுரம் பெரிய குளத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் சிறுத்தை கடந்து சென்றதாக அவ்வழியாக வந்த ஒருவர் தகவல் அளித்தார்.இது குறித்து, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமிக்கு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

வன ஊழியர்கள், சாமளாபுரம் குளத் தின் சுற்றுப்பகுதி, அருகேயுள்ள தோட்டங்கள் மற்றும் செடி புதர்கள் வளர்ந்து நிறைந்துள்ள மறைவான பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்தினர்.ஆனால் சிறுத்தையின் கால் தடங்கள் எங்கும் பதிவாகவில்லை. சில இடங்களில் காணப்பட்ட கால் தடங்கள் நாய்களுடையது என்பது தெரிந்தது. இரவு நேரத்தில் வேகமாக கடந்து ெசன்ற நாயைக் கண்டு அவர் சிறுத்தைஎன சந்தேகித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்துக்கான அறிகுறி எதுவும் தென்படாத நிலையில் அப்பகுதியினர் நிம்மதி அடைந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X