லாரி மோதி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : கோவை, தாமஸ் வீதியை சேர்ந்தவர் புகழேந்தி, 47. அவர் மனைவி ைஷலா, 45. இருவரும் நகை கடை நடத்தி வந்தனர். கடந்த 2018 நவ., 9 ம் தேதி, போத்தனுார்- செட்டிபாளையம் ரோட்டில் இவர்கள் காரில் சென்றனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் புகழேந்தி உயிரிழந்தார். ைஷலாவுக்கு காயம் ஏற்பட்டது.உயிரிழப்புக்கு 1.5 கோடி ரூபாய், ைஷலாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு 6



திருப்பூர் : கோவை, தாமஸ் வீதியை சேர்ந்தவர் புகழேந்தி, 47. அவர் மனைவி ைஷலா, 45. இருவரும் நகை கடை நடத்தி வந்தனர். கடந்த 2018 நவ., 9 ம் தேதி, போத்தனுார்- செட்டிபாளையம் ரோட்டில் இவர்கள் காரில் சென்றனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் புகழேந்தி உயிரிழந்தார். ைஷலாவுக்கு காயம் ஏற்பட்டது.உயிரிழப்புக்கு 1.5 கோடி ரூபாய், ைஷலாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு 6 லட்சம் ரூபாயும் இழப்பீடு கேட்டு, திருப்பூர் மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு கோர்ட்டில், வக்கீல் தங்கராஜ் மூலம் வழக்கு தொடர்ந்தனர். லாரியின் இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் சார்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீகுமார், புகழேந்தி உயிரிழப்புக்கு 75 லட்சம் ரூபாய்; காயமடைந்தை ஷலாவுக்கு 2.25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X