குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடம் திறப்பு

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : குன்னத்துாரில், 3.75 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், குன்னத்துார், தாராபுரம் தவிர மற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன.குன்னத்துாரில், 3.75 கோடி ரூபாய்


திருப்பூர் : குன்னத்துாரில், 3.75 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், குன்னத்துார், தாராபுரம் தவிர மற்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன.குன்னத்துாரில், 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குன்னத்துார் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, திறந்து வைத்தார்.குன்னத்துாரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத், வேளாண் துணை இயக்குனர் சண்முகசுந்தரம், திருப்பூர் விற்பனைக்குழு செயலாளர் பாலசந்திரன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்,''குன்னத்துார் சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 250 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவர். சேமிப்பு கிடங்கு, பரிவர்த்தனை கூடம், உலர்களம், அலுவலக கட்டடம், சுகாதார வசதி, சுற்றுச்சுவர் வசதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X