வதந்தியை நம்பாதீர்கள்: கொப்பரை விலை நிச்சயம் உயரும்!

Added : செப் 07, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : 'கொப்பரை விலை குறித்த பொய்யான தகவல்கள் பரவுவதால் விவசாயிகள் குழப்பமடைய வேண்டாம். விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது,' என, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட சூழலில், தற்போது மத்திய அரசு மீண்டும் வரும், 30ம் தேதி வரை கொள்முதல் செய்ய



பொள்ளாச்சி : 'கொப்பரை விலை குறித்த பொய்யான தகவல்கள் பரவுவதால் விவசாயிகள் குழப்பமடைய வேண்டாம். விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது,' என, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தார்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட சூழலில், தற்போது மத்திய அரசு மீண்டும் வரும், 30ம் தேதி வரை கொள்முதல் செய்ய உத்தரவிட்டது.அதன்படி, தமிழக அரசு கொள்முதல் மையங்களை திறந்து, கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாடும் சூழலில், கொப்பரை விலை குறையும் என பொய்யான தகவல்களை பரப்புவதை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்க மாநில பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது:ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள அரசு, ஒரு வாரத்துக்கு கொப்பரை கொள்முதலை நிறுத்தியுள்ளது.இந்நிலையில், கொப்பரைக்கு விலை இல்லை என, பொய்யான தகவல்களை தெரிவித்து, தேங்காய் எண்ணெய் வியாபாரிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள், இடைத்தரகர்கள், ஆயில் நிறுவனஇடைத்தரகர்கள் கூட்டாக சேர்ந்து, குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

பொய்யான தகவல்களை விவசாயிகள் நம்ப வேண்டாம். தற்போது, தேங்காய் உற்பத்தி, 60 சதவீதம் குறைந்துள்ளது. எனவே, தேங்காய் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. தற்போது, கொப்பரை உற்பத்தி அதிகரிக்காமல் கட்டுப்படுத்த, வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும்.ஒரு வாரத்துக்குள் மீண்டும் விலை உயரும் வாய்ப்புள்ளது. விவசாயிகள், கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்தி கொப்பரையை வழங்கி பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X