நித்தியானந்தாவை கொல்ல முயற்சி? விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!

Added : செப் 07, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை : சர்ச்சைக்குரிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை, விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். பாரம்பரிய மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக, அவர்
Nithyananda,நித்தியானந்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : சர்ச்சைக்குரிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை, விஷம் கொடுத்து ரகசியமாக கொல்ல முயற்சி நடந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா, நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார். பாரம்பரிய மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக, அவர் நியமிக்கப்பட்டதும், பெரும் சர்ச்சையானது.

நித்தியானந்தா மீது புகார்கள் குவிய, நாட்டில் இருந்தே வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, அங்கு வசிப்பதாக தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால், கடந்த ஓராண்டாக அவரது செயல்பாடுகள் குறைந்தன. பல மாதங்களாக, அவரது நேரடி வீடியோக்கள் எதுவும் வரவில்லை. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தன.


latest tamil news


இந்நிலையில், சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆரோக்கியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதற்கு, மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது. இது, அவரது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு இந்தியாவிலும், பல நாடுகளிலும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இவற்றை கைப்பற்ற, அவருடன் இருப்பவர்களே, ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
15-செப்-202207:01:33 IST Report Abuse
N Annamalai இந்த செய்தி உண்மை என்றால் அவர் விரைவில் நலம் பெற விழைகிறேன் .
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
07-செப்-202214:25:31 IST Report Abuse
RaajaRaja Cholan ஒருவனை எப்படி அழிக்க வேண்டும் என்று திருட்டு மாடலுக்கும் , அந்நிய மத கைக்கூலிகளுக்கும் தெரியும் . இந்திய நம்பிக்கையை தூக்கிப்பிடித்தால் வந்து விஷத்தை கக்கி தன மதத்தை பரப்ப நினைக்கும் கூலிகள்
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
13-செப்-202221:54:24 IST Report Abuse
Yokiyanநீ கலக்கு சித்தப்பு. கலவரம் பண்றோம். களக்குறோம்....
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
07-செப்-202213:00:48 IST Report Abuse
Subramaniyam Veeranathan எட்டிமரம் பூத்தென்ன காய்த்தென்ன, ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X