மீன் மார்க்கெட்ரூ.1.41 கோடிக்கு ஏலம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.இந்நிலையில், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் மறு ஏலம் நேற்று நடத்தப்பட்டது. ஏற்கனவே, 70 லட்சம் ரூபாய், கோரப்பட்டிருந்த



திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.இந்நிலையில், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் மறு ஏலம் நேற்று நடத்தப்பட்டது. ஏற்கனவே, 70 லட்சம் ரூபாய், கோரப்பட்டிருந்த நிலையில், ஏலம் எடுக்காத நபர், 48 மணி நேரத்தில், 73 லட்சம் செலுத்தியதை தொடர்ந்து, மறு ஏலம் நேற்று நடந்தது.மீன் மார்க்கெட்டில், 28 கடைகள் கொண்ட ஒரு கூடாரமாக, கணக்கில் கொள்ளப்பட்டு, மொத்தமாக, 4 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். இதில், ஒரு கோடியே, 41 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஏலத்தை விட இருமடங்கான தொகையாகும். பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, 84 கடைகள், ஐந்து கவுன்டர்கள் கொண்ட ஒரு புட்கோர்ட் மற்றும் இரண்டு உணவகங்களுக்கான ஏலம் இன்று நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X