வடக்கு குறுமைய தடகளம்; பாரதியார் பல்கலையில் துவக்கம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோவை : கோவை கல்வி மாவட்டம் வடக்கு குறுமையத்துக்கான தடகளப்போட்டிகள் நேற்று, பாரதியார் பல்கலை மைதானத்தில் துவங்கின.பள்ளிக்கல்வித்துறை சார்பில், கோவை கல்வி மாவட்டத்தில் குறுமைய அளவிலான விளையாட்டு மற்றும் தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு போட்டிகள் பெரும்பாலான குறுமையங்களில் முடிந்துள்ள நிலையில், நேற்று முதல் மாணவ - மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள்
வடக்கு குறுமைய தடகளம்; பாரதியார் பல்கலையில் துவக்கம்



கோவை : கோவை கல்வி மாவட்டம் வடக்கு குறுமையத்துக்கான தடகளப்போட்டிகள் நேற்று, பாரதியார் பல்கலை மைதானத்தில் துவங்கின.பள்ளிக்கல்வித்துறை சார்பில், கோவை கல்வி மாவட்டத்தில் குறுமைய அளவிலான விளையாட்டு மற்றும் தடகளப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டு போட்டிகள் பெரும்பாலான குறுமையங்களில் முடிந்துள்ள நிலையில், நேற்று முதல் மாணவ - மாணவிகளுக்கான தடகளப்போட்டிகள் துவங்கின.கோவை வடக்கு குறுமையத்துக்கான தடகளப்போட்டிகள், சின்னத்தடாகம் அரசு பெண்கள்

மேல்நிலைப்பள்ளி சார்பில் நேற்று, இன்று என இரண்டு நாட்கள் பாரதியார் பல்கலையில் நடக்கிறது. போட்டியை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.இதில், மாணவ மாணவிகளுக்கு 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடக்கின்றன. வடக்கு குறுமையத்துக்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.14 வயது மாணவிகளுக்கான நீளம் தாண்டுதலில், தம்பு பள்ளியின் ஜெரீனா முதலிடம், ஸ்வாதந்திரா பள்ளியின் ஐஸ்வர்யா இரண்டாமிடம் பிடித்தனர்.14 வயது மாணவர்கள் பிரிவில், தம்பு பள்ளியின் மணிகண்டன் முதலிடம், ராமசாமி நாயுடு பள்ளியின் பரத் இரண்டாமிடம் பிடித்தனர்.நேற்று நடந்த, 17 வயது மாணவிகள் பிரிவு, உயரம் தாண்டுதலில் வி.சி.வி., பள்ளி மாணவி, வென்னிலா முதலிடம், பயனீயர் மில்ஸ் பள்ளி மாணவி யோகஸ்ரீவர்சினி இரண்டாமிடம்; 1500மீ., ஓட்டத்தில், இன்பன்ட் ஜீசஸ் பள்ளி அனிஷா முதலிடம், ஏ.வி.பி., பள்ளி மாணவி,

இரண்டாமிடம்; வட்டு எறிதல் போட்டியில், அசோகபுரம் அரசு பள்ளி மாணவி, மவுனிகா முதலிடம், தம்பு பள்ளி மாணவி, பூஜா இரண்டாம் இடம் பிடித்தனர்.இதேபோல், 17 வயது மாணவர்கள் 1500மீ., பிரிவில் கே.வி.எம்., பள்ளியின் நிதிஷ் முதலிடமும், பயனீயர் மில்ஸ் பள்ளியை சேர்ந்த தருண்குமார் இரண்டாமிடமும் பிடித்தனர்.19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், ஈட்டி எறிதல் போட்டியில், ராமசாமி நாயுடு பள்ளி தீபக் குமார் முதலிடம், ஸ்வாதந்திரா பள்ளி நிதிஷ் குமார் இரண்டாமிடம்; 1500மீ., பிரிவில், ராமசாமி நாயுடு பள்ளி மாணவன் தருண் குமார் முதலிடம், பயனீயர் மில்ஸ் பள்ளியை சேர்ந்த ரகு பிரசாத் இரண்டாமிடம் பிடித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X