கிசான் சம்மான் நிதி திட்டம்சூலுார் வட்டாரத்தில் இன்று முகாம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
சூலுார், : கிசான் சம்மான் நிதி திட்டத்தில், ஆவணங்களை புதுப்பிக்க, சூலுார் வட்டார கிராமங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், ஆண்டுதோறும், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. விவசாயிகள், ஆதார், சிட்டா, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்து கொள்ள



சூலுார், : கிசான் சம்மான் நிதி திட்டத்தில், ஆவணங்களை புதுப்பிக்க, சூலுார் வட்டார கிராமங்களில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், ஆண்டுதோறும், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. விவசாயிகள், ஆதார், சிட்டா, ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.சூலுார் வட்டாரத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இன்னும் ஆவணங்களை பதிவு செய்யாமல் உள்ளனர். அவர்கள் பயன் பெற, சூலுார் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சிறப்பு முகாம்கள் கிராம அளவில் இன்று நடக்கின்றன.

கீழ்கண்ட விபரப்படி விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.பதுவம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில்- பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம் விவசாயிகளும், சோமனுார் ஆர்.ஐ., அலுவலகத்தில்- கரவளி மாதப்பூர், கருமத்தம்பட்டி விவசாயிகளும், கலங்கல் ஊராட்சி அலுவலகத்தில்- கண்ணம்பாளையம், கலங்கல், பீடம்பள்ளி பகுதியினர், காடாம்பாடி ஊராட்சி அலுவலகத்தில்-சூலுார், காடாம்பாடி பகுதியினர், சூலுார் வேளாண் அலுவலகத்தில் -அரசூர், நீலம்பூர் பகுதியினர், செம்மாண்டாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்- கிட்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் பகுதியினர் பங்கேற்கலாம்.மேலும், மோப்பிரிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில்- மோப்பிரிபாளையம் பேரூராட்சி பகுதியினர், கணியூர் ஊராட்சி அலுவலகத்தில் -கணியூர், மயிலம்பட்டி விவசாயிகளும், ராசிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில்- காங்கயம்பாளையம், ராசிபாளையம் விவசாயிகளும், ஒட்டர் பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் - இருகூர், பள்ளபாளையம் விவசாயிகளும் பங்கேற்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X