ரோட்டுக்கு ஒட்டு வேலை செய்வதா!

Added : செப் 07, 2022 | |
Advertisement
கோவை : பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் (பொ) ஷர்மிளா முன்னிலை வகித்தார். சின்னம்மாள் வீதியில் வசிப்போர் கொடுத்த மனு:ரோடு போடுங்களேன்சின்னம்மாள் வீதியில் ரோட்டை சீரமைக்க, மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம். கமிஷனரிடம் மனு கொடுத்து நடவடிக்கை இல்லை. மேற்கு மண்டல தலைவர், உதவி கமிஷனர், கவுன்சிலர் ஆகியோரிடம்



கோவை : பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கமிஷனர் (பொ) ஷர்மிளா முன்னிலை வகித்தார். சின்னம்மாள் வீதியில் வசிப்போர் கொடுத்த மனு:


ரோடு போடுங்களேன்



சின்னம்மாள் வீதியில் ரோட்டை சீரமைக்க, மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம். கமிஷனரிடம் மனு கொடுத்து நடவடிக்கை இல்லை. மேற்கு மண்டல தலைவர், உதவி கமிஷனர், கவுன்சிலர் ஆகியோரிடம் முறையிட்டோம். மூன்று மாதத்தில் சரி செய்து தருவதாக, உதவி கமிஷனர் உறுதியளித்தார்.தற்போது, 'ஒட்டு வேலை' என்கிற பெயரில், சில வேலைகள் நடக்கின்றன. சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை கீழே போட்டு, அதற்கு மேல் கல் போடுகின்றனர். கல் வெளியே வந்து விடுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்ல மக்கள் பயப்படுகின்றனர். ஒட்டு வேலையை நிறுத்தி, தலைமை செயலாளர் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, ரோடு போட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும், உப்பு தண்ணீர் வழங்க வேண்டும். தெருநாய் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை பூங்காவாக மாற்ற வேண்டும்.


கழிப்பறை கட்டித்தாங்க!


பீளமேடு ஏ.டி., காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'ஏ.டி., காலனியில் பொதுக்கழிப்பிடம் இல்லை. சி.எம்.சி., காலனி, நேரு நகரில் உள்ள கழிப்பறையை தொடர்ந்து பயன்படுத்துவதால், பொதுமக்களுக்குள் தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கழிப்பறை கட்டித் தருவதோடு, கொசுமருந்து தெளிக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.


நாய்களுக்கு கருத்தடை


விலங்குகள் நல ஆர்வலர் அங்குராசு கொடுத்த மனுவில், 'கோவையில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். நாய்களுக்கு கருத்தடை செய்வது அவசியம். கே.வி.எஸ்., என்கிற தன்னார்வ அமைப்பு, நாய்களை பிடித்து கருத்தடை செய்ய உதவுவதாக கூறியுள்ளனர். இதற்கு மாநகராட்சி தரப்பில் அனுமதி தர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


பணிமனை அவசியம்


சமூக நீதி துாய்மை பணியாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட, 325 துாய்மை பணியாளர்கள் குப்பை அள்ளும் பணி செய்வதில்லை. அதனால், மற்றவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருக்கிறது. குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதானால், ஓட்டுனர்களே சரி செய்ய வேண்டியிருக்கிறது. மாநகராட்சி பணிமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, டிரைவர்களுக்கு ஓய்வறை கட்டிக் கொடுக்க வேண்டும். குப்பை கொட்டும் பெட்டியை சீரமைக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

மனுக்கள் நிலுவை

ஜூலை, 19 முதல், ஆக., 30 வரை நடந்த முகாம்களில், 273 மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. இவற்றில், 207 மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்னும், 66 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. இதில், மத்திய மண்டலத்தில், 19, கிழக்கு மண்டலத்தில், 15 மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X