தெற்கு குறுமைய 'டெனிகாய்ட்' போட்டி 

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் 'டெனிகாய்ட்' போட்டி, காங்கயம் ரோடு, வித்ய விகாசினி பள்ளியில் நடந்தது.பள்ளியின் தாளாளர் தர்மலிங்கம், பள்ளி முதல்வர் அன்பரசு போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், லிட்டில் பிளவர் பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில் பிரன்ட்லைன் அகாடமி பள்ளி அணியை வென்றது.
தெற்கு குறுமைய 'டெனிகாய்ட்' போட்டி 



திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் 'டெனிகாய்ட்' போட்டி, காங்கயம் ரோடு, வித்ய விகாசினி பள்ளியில் நடந்தது.பள்ளியின் தாளாளர் தர்மலிங்கம், பள்ளி முதல்வர் அன்பரசு போட்டிகளை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், லிட்டில் பிளவர் பள்ளி, 2 - 0 என்ற செட் கணக்கில் பிரன்ட்லைன் அகாடமி பள்ளி அணியை வென்றது. இரட்டையர் பிரிவில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் பிரன்ட்லைன் பள்ளி அணியை வென்றது.பதினேழு மற்றும் பத்தொன்பது வயது பிரிவு, ஒற்றையர், இரட்டையர் இரு பிரிவிலும் வித்ய விகாசினி பள்ளி அணி - பிரன்ட்லைன் பள்ளி அணிகள் மோதின. நான்கிலும், 2 - 0 என்ற செட் கணக்கில் வித்யவிகாசினி பள்ளி அணி வென்றது.


'பீச்' வாலிபால் போட்டி


மாணவர், 14 வயது பிரிவு இறுதி போட்டியில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், வேலவன் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவு இறுதிப் போட்டியில் வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில் பிரன்ட்லைன் அகாடமி பள்ளி அணியை வென்றது. பத்தொன்பது வயது பிரிவில், வேலவன் பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், வித்ய விகாசினி பள்ளி அணியை வென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X