போதை பொருள் ஒழிப்பில் தீவிரம்; அமைச்சர் பேச்சு

Added : செப் 07, 2022 | |
Advertisement
பல்லடம் : போதை ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக, பல்லடத்தில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா வரவேற்றார். நகராட்சி தலைவர் கவிதாமணி, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், நகர செயலாளர் ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் சாமிநாதன்



பல்லடம் : போதை ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக, பல்லடத்தில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா வரவேற்றார். நகராட்சி தலைவர் கவிதாமணி, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், நகர செயலாளர் ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:சமூக விரோதிகளின் பிடியில் உள்ள போதை பழக்கத்தை ஒழிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. போதை புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மாணவ, மாணவியரும் அரசுக்கு உதவ வேண்டும். இது குறித்து இலவச போலீஸ் கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.கல்வியில் தமிழகம் முன்னேற வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ மாணவியர் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, 200 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், வார்டு கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X