வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்| Dinamalar

வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

Added : செப் 07, 2022 | |
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது.நிதிநத்தம் மாரியம்மன் கோவில் முன், நடந்த போராட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் முருகனாந்தம், மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் முன்னிலை
வீட்டுமனைப் பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்



திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது.நிதிநத்தம் மாரியம்மன் கோவில் முன், நடந்த போராட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் முருகனாந்தம், மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் முன்னிலை வகித்தனர்.அவர்களிடம் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என, தெரிவித்தனர்.இதையடுத்து விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் செல்வமணி, பேச்சுவார்த்தை நடத்தினார். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட சில காரணங்களால் பணி தாமதமாகி வருகிறது. மூன்று மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X