மாணவர்களுக்கு தலை பெருசா? கணக்கெடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு!

Added : செப் 07, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு தலை பெரியதா, சிறியதா என்பது உள்பட, 36 வகையான தகவல்களை சேகரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவியரிடம், மாதவிடாய் குறித்த தகவல்களை பெற்று, அதனை செயலியில் பதிவிட அறிவுறுத்தப்பட்டது. நம் நாளிதழில் செய்தி வெளியானதும், அந்த தகவலை திரட்ட வேண்டாம் என, நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, மருத்துவ ஆராய்ச்சி
அரசு பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு தலை பெரியதா, சிறியதா என்பது உள்பட, 36 வகையான தகவல்களை சேகரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவியரிடம், மாதவிடாய் குறித்த தகவல்களை பெற்று, அதனை செயலியில் பதிவிட அறிவுறுத்தப்பட்டது. நம் நாளிதழில் செய்தி வெளியானதும், அந்த தகவலை திரட்ட வேண்டாம் என, நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், 36 வகையான நோய்கள் குறித்து ஆய்வு செய்து, அதன் விபரத்தை, 'எமிஸ்' செயலியில் பதிவிடுமாறு, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



அதாவது, ரத்த சோகை, தொழுநோய், தோல்நோய், தைராய்டு, கண் பார்வை பாதிப்பு, காசநோய், பல் நோய்கள், வைட்டமின் குறைவு, நோய் எதிர்ப்பு குறைவு, சிறுநீர் பாதை பாதிப்பு, மாணவர்களுக்கு பெரிய தலையா, சிறிய தலையா, இரண்டு கண்களும் ஒரே அளவில் உள்ளதா என்பது உள்ளிட்ட ஆய்வுக்கான பட்டியல்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரையும் தனியாக அழைத்து, அவரது உடலை சோதனை செய்து, இந்த நோய்கள் குறித்த மாணவர்களின் தகவல்களை பதிவிட வேண்டும்.

கடந்த மாதத்தில், ஒரு வாரம் முழுதும் மாணவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளை பதிவு செய்ய, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டது. நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தது முதல் பாடம் நடத்த விடாமல், பல்வேறு திட்ட பணிகளின் புள்ளிவிபர சேகரிப்பு மற்றும் செயலாக்கம் தொடர்பாக, கூடுதல் பணி வழங்குவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
07-செப்-202213:03:24 IST Report Abuse
S.Ganesan ஆசிரியர்கள் கூடுதல் சம்பளம் வேண்டும், சலுகைகள் வேண்டும் என்றெல்லாம் போராட்டம் நடத்தும் போதெல்லாம் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு நடத்தும் பாடங்கள் பற்றியெல்லாம் நினைவுக்கு வரவில்லையா ? இப்போது கவலை படுவதெல்லாம் சுத்த பம்மாத்து வேலை
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
07-செப்-202212:34:22 IST Report Abuse
அசோக்ராஜ் மோடியின் ஆட்சியில் இந்தியா ஒரு பனானா ரிபப்ளிக் ஆகி விட்டது. வெளி நாட்டு இயக்கங்கள் எளிதாக அரசில் ஊடுருவி விதவிதமாக ப்ரொஃபைலிங் செய்கின்றன. மூளைச்சாவு என்று அறிவித்து உறுப்பு அறுவடை செய்ய இந்தத் தரவுகள் மிக உதவும்
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
07-செப்-202214:54:07 IST Report Abuse
ramஇதில் எங்கு வந்தார் மோடி, இது திருட்டு திமுக அரசில் நடக்கும் கோமாளித்தனம், முரசொலி மட்டும் படிக்காதீர்கள், இப்படித்தான்....
Rate this:
raja - Cotonou,பெனின்
07-செப்-202215:04:46 IST Report Abuse
rajaகொத்தடிமையே......
Rate this:
raja - Cotonou,பெனின்
07-செப்-202216:52:36 IST Report Abuse
rajaகேட்டவன் திராவிட துக்ளக் அரசனும் அவனின் மங்குனி அமைச்சனும்........
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
07-செப்-202212:02:36 IST Report Abuse
M  Ramachandran நல்ல முன்னேற்றம்.இன்னும் என்ன கேளி கூத்துக்கள் நடக்க போகிறதோர் தெரிய வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X