ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு 20 சதவீதம்!

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 4.73 லட்சம் வாக்காளர் (20.36 சதவீதம்) தங்களது ஆதார் விவரத்தை இணைக்க விண்ணப்பித்துள்ளனர்.ஒரு வாக்காளர், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், ஆதார் விவரத்தை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக, ஆதார் விவரம் இணைப்பு பணி நடந்து வருகிறது.'ஆன்லைனில்' இணைப்பு கொடுக்க, 'சர்வர்'



திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 4.73 லட்சம் வாக்காளர் (20.36 சதவீதம்) தங்களது ஆதார் விவரத்தை இணைக்க விண்ணப்பித்துள்ளனர்.ஒரு வாக்காளர், ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடம்பெறுவதை தடுக்கும் வகையில், ஆதார் விவரத்தை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக, ஆதார் விவரம் இணைப்பு பணி நடந்து வருகிறது.'

ஆன்லைனில்' இணைப்பு கொடுக்க, 'சர்வர்' கிடைக்காததால், வாக்காளர் வெறுத்து போயினர். இந்நிலையில், சிறப்பு முகாம் நடத்தியதால், அதனை பயன்படுத்தி ஆதார் விவரங்களை இணைத்துள்ளனர். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகள், அதிக புலம்பெயர் தொழிலாளர்களை கொண்டுள்ளன.ஒரே தொழிலாளர், வெவ்வேறு பாகங்களில் வாக்காளராக இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுப்பதிவு சதவீதம் கணக்கிடுவதிலும், ஓட்டு எண்ணிக்கையின் போதும், விடை தெரியாத குழப்பம் நிலவுகிறது.



மடத்துக்குளத்தில்




அதிக ஆர்வம்


இந்திய தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கு வழி செய்தும், இந்த தொகுதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. மாவட்ட அளவில், மடத்துக்குளம் தொகுதியில், 31.18 சதவீத வாக்காளர் ஆதார் இணைத்துள்ளனர்; அடுத்ததாக, உடுமலையில், 30.65 சதவீத வாக்காளர் இணைத்துள்ளனர்.அவிநாசி தொகுதியில், 25.96 சதவீதம் வாக்காளர் ஆதார் இணைத்துவிட்டனர். தாராபுரம் - 21.32, திருப்பூர் தெற்கு - 19.18, காங்கயம் - 16.54, பல்லடம் -15.99 சதவீதம் வாக்காளர் இணைத்துள்ளனர். மாவட்டத்தில் குறைந்தபட்ச அளவாக, திருப்பூர் வடக்கு தொகுதியில், 9.46 வாக்காளர் மட்டும் ஆதார் இணைத்துள்ளனர்; திருப்பூர் வடக்கு தொகுதி மட்டும் பின்தங்கியுள்ளது.


வடக்கில் குறைவு


இதுகுறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை தொகுதியில் மட்டும், 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர் ஆதார் இணைத்துள்ளனர். திருப்பூர் வடக்கு தொகுதியில், அதிகபட்சமாக, 3.80 லட்சம் வாக்காளர் உள்ளனர்; அவர்களில், 35 ஆயிரத்து, 971 பேர் மட்டுமே, ஆதார் இணைத்துள்ளனர்.திருப்பூர் வடக்கு தொகுதியில் மட்டுமே, ஆதார் இணைப்பு குறைவாக இருக்கிறது. கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வடக்கில் சறுக்கல் ஏன்?

ஆதார் இணைப்புக்கான அவகாசம் டிச., மாத இறுதி வரை இருப்பதால், வாக்காளர் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்; கட்சியினரும் இதில் ஆர்வம் காட்டவில்லை. nvsp என்ற இணையதளம், வாக்காளருக்கு ஒத்துழைப்பதில்லை, சர்வர் கிடைப்பதில்லை இப்படியெல்லாம் வாக்காளர் பல காரணங்களை கூறுகின்றனர். இருப்பினும், திருப்பூர் வடக்கு தொகுதியில், ஆதார் இணைப்பு குறித்த விழிப்புணர்வு குறைவு என்பதே நிதர்சனமான உண்மை.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X