கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கக் கோரி மனு

Added : செப் 07, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : 'கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நேரடி வகுப்புகளைத் தொடங்க வேண்டும்' என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்துள்ள மனு:கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை தொடர்பாக நடந்த
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில்  நேரடி வகுப்புகள் தொடங்கக் கோரி மனு



கள்ளக்குறிச்சி : 'கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நேரடி வகுப்புகளைத் தொடங்க வேண்டும்' என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்துள்ள மனு:கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது பள்ளி வாகனங்கள், நாற்காலிகள், சான்றிதழ்கள், பாட புத்தகங்கள் ஆகியவற்றிற்கு வன்முறைக் கும்பல் தீ வைத்து எரித்தது.

இதனால், எல்.கே.ஜி., முதல் 8ம் வரை ஆன் லைன் வகுப்புகளும், 9 முதல் பிளஸ் 2 வரை மாற்று இடத்தில் நேரடி வகுப்புகளும் நடக்கிறது.செப்டம்பர் 2ம் தேதிக்குள் பள்ளி வளாகத்தை ஒப்படைத்து விடுவர். பள்ளியை சரி செய்து நேரடி வகுப்புகள் ஆரம்பித்து விடுவர் என எதிர்பார்த்தோம். ஆனால், இது குறித்த சரியான பதில் கிடைக்கவில்லை.கிராம சூழ்நிலையால் ஆன்லைன் வகுப்பில் படிக்க வைக்க முடியவில்லை. சரியாக படிக்க முடியவில்லையே என பிள்ளைகளும் மனதளவில் பாதிப்பில் உள்ளனர்.

இதனால் 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பள்ளி வளாகத்தை ஒப்படைத்து, கூடிய விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், 'இன்னும் 2 தினங்களில் பள்ளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகையான சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 10 தினங்களில் சான்றிதழ் வழங்கப்படும்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X