வாக்காளர் பட்டியலில் 2 கோடி பேர் ஆதார் எண்

Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைத்தோர் எண்ணிக்கை, இரண்டு கோடியாக உயர்ந்துள்ளது.தமிழகம் முழுதும் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி, ஆக., 1ல் துவங்கியது. விடுமுறை நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர். இப்பணி, 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலரிடம்,
Voter ID, Aadhaar card, Voters, Aadhaar

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைத்தோர் எண்ணிக்கை, இரண்டு கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுதும் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி, ஆக., 1ல் துவங்கியது. விடுமுறை நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர். இப்பணி, 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலரிடம், ஆதார் எண் வழங்க முடியாதவர்கள், www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

இது தவிர, 'Voter Help Line' என்ற, 'மொபைல் ஆப்' வழியாகவும், ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுவரை இரண்டு கோடி வாக்காளர்கள், தங்கள் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலில் இணைக்க, விண்ணப்பம் அளித்துள்ளனர். இது, மொத்த வாக்காளர் எண்ணிக்கையில், 32 சதவீதம்.


latest tamil news


நகரங்களில் கணவன், மனைவி வேலைக்கு செல்வதால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்லும் போது, வீட்டில் யாரும் இருப்பதில்லை. இதை தவிர்க்க, சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர, ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களிடம், ஆதார் எண் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

கொரோனா தடுப்பூசி முகாம் பகுதிகளில், ஆதார் எண் இணைக்க விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. மாநிலம் முழுதும் நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X