மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து குற்றப்பத்திரிக்கை நகல் தேவை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 07, 2022 | |
Advertisement
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து வழக்கை முடித்து, மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியதால், குற்றப்பத்திரிக்கை நகலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழு செயலாளர் சுடலைமணி 2018 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் 2018 பிப்.2 ல் தீ விபத்து ஏற்பட்டது. வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து வழக்கை முடித்து, மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியதால், குற்றப்பத்திரிக்கை நகலை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஹிந்து ஆலய பாதுகாப்புக்குழு செயலாளர் சுடலைமணி 2018 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் 2018 பிப்.2 ல் தீ விபத்து ஏற்பட்டது. வீரவசந்தராயர் மண்டபம் மற்றும் கடைகள் சேதமடைந்தன. பயங்கரவாத அச்சுறுத்தலால் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீப்பற்றக்கூடிய பொருட்களை போலீசார் அனுமதிப்பதில்லை. இச்சூழ்நிலையில் தீ விபத்து நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுடலைமணி மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு: மின்கசிவால் தீ விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது. வழக்கு முடிக்கப்பட்டு, மேல்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து கோயில் வளாகத்திலிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தது.நீதிபதிகள்: சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகலை 2 வாரங்களில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X