மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Added : செப் 07, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 2ம் தேதி இரவு 11 மணிக்கு காரைக்கால் கீழ காசாக்குடி சுனாமி நகரை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மாவட்டம் கீழ காசாக்குடி மேட்டை சேர்ந்த
மயிலாடுதுறை, காரைக்கால், மீனவர்கள்,  கைது,  இலங்கை கடற்படை

மயிலாடுதுறை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 2ம் தேதி இரவு 11 மணிக்கு காரைக்கால் கீழ காசாக்குடி சுனாமி நகரை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மாவட்டம் கீழ காசாக்குடி மேட்டை சேர்ந்த மணிவண்ணன், செல்வமணி, அசோக், கார்த்திகேயன், சுனில், செல்வம், மண்டபத்தூர் சுதன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னூர் பேட்டை சக்திவேல், தரங்கம்பாடி பாலமுருகன், புதுப்பேட்டை ரமேஷ், பாண்டித்துரை, பூம்புகாரை சேர்ந்த சஞ்சய் ஆகிய 12 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் இந்திய எல்லையை கடந்து இலங்கை முல்லைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் சென்ற விசைப்படகும் கடல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கடல் சார் சட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா மற்றும் தரங்கம்பாடி கடற்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X