தாம்பரத்தில் புதிய கட்டடங்களுக்கு உயர கட்டுப்பாடு: வரையறையை வெளியிட்டது சி.எம்.டி.ஏ.,

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தாம்பரம் விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான உயர கட்டுப்பாடுகளை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முழுமை திட்டப்படி நிலங்களுக்கான வகைப்பாடுகளை வரையறுத்துள்ளது.சிக்கல்இத்துடன் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கான கட்டுப்பாடுகளையும் வரையறுத்துள்ளது.இதில், தாம்பரம் விமானப்படை

சென்னை: தாம்பரம் விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான உயர கட்டுப்பாடுகளை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முழுமை திட்டப்படி நிலங்களுக்கான வகைப்பாடுகளை வரையறுத்துள்ளது.


சிக்கல்



இத்துடன் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கான கட்டுப்பாடுகளையும் வரையறுத்துள்ளது.இதில், தாம்பரம் விமானப்படை நிலையத்தை சுற்றி புதிய கட்டடங்கள் கட்டு வதற்கான உயர கட்டுப்பாடுகள் உள்ளன. இது குறித்த முழு விபரங்கள் வெளிப்படையாக இல்லாதததால், மக்கள் புதிய கட்டடங்கள் கட்டும் போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.



latest tamil news




இந்நிலையில், தாம்பரம் விமான படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை தொழில்நுட்ப ரீதியாக பிரித்து, தனித்தனி வண்ணங்களில் குறிப்பிட்டு, புதிய வரைபடத்தை சி.எம்.டி.ஏ., வெளியிட்டுஉள்ளது.
*விமான படைநிலையத்தை சுற்றிஉள்ள நெருக்கமான பகுதிகள் சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டு புதிய கட்டுமான திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன
* வெளிர் நீலம், இளஞ்சிவப்பு நிற பகுதிகளில், 69 மீட்டர் உயரம் வரையிலான கட்டடங்கள் கட்ட தடையின்மை சான்று தேவையில்லை*மஞ்சள் வண்ண பகுதிகளில், 144 மீட்டர் உயரம் வரையிலான கட்டடங்களுக்கு தடையின்மை சான்று பெற வேண்டியதில்லை
*பச்சை வண்ணமிடப்பட்ட பகுதிகளில், 174 மீட்டர் உயரம் வரையிலான கட்டடங்கள் கட்ட தடையின்மை சான்று தேவையில்லை.இந்த வரையறைக்கு மேற்பட்ட கட்டடங்கள் கட்டுவோர், தாம்பரம் விமான படை நிலையத்தில் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து, தடையின்மை சான்று பெற வேண்டும்.


இணையதளம்


கட்டட அனுமதி பெற்ற நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.இது குறித்த கூடுதல் விபரங்களை http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பொது மக்கள் பெறலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-செப்-202213:55:09 IST Report Abuse
Bhaskaran Kaasuvaangi pottukondu anumathi kodupaango
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X