36 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'வாழ்வாதாரத்திற்கான சாலை' திட்டம் துவக்கம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
அரசு பள்ளிகளை சேர்ந்த, 36 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், 'வாழ்வாதாரத்திற்கான சாலை' திட்டத்தை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, 133 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரையுள்ள, 36 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், 'வாழ்வாதாரத்திற்கான சாலை' என்ற திட்டத்தை, அசோக்


அரசு பள்ளிகளை சேர்ந்த, 36 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், 'வாழ்வாதாரத்திற்கான சாலை' திட்டத்தை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, 133 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரையுள்ள, 36 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், 'வாழ்வாதாரத்திற்கான சாலை' என்ற திட்டத்தை, அசோக் லேலண்ட் நிறுவனம் துவங்கியுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு, உயர்கல்வி, தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளுக்கு தயார்படுத்துதல், உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறமையை வளர்த்தல், டிஜிட்டல் திறன்கள், வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் இளம் பருவத்தினற்கான ஆலோசனைகளை வழங்குவதல் ஆகியவற்றை, அசோக் லேலண்ட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இத்திட்டத்தை, தளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று மாலை துவக்கி வைத்தார்.
பள்ளிக்கல்வி துணை இயக்குனர் நந்தகுமார், எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ்(தி.மு.க), ராமச்சந்திரன்(இ.கம்யூ), மேயர் சத்யா, அசோக் லேலண்ட் சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாலச்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X