கந்துவட்டியால் டிரைவர் தற்கொலை; போலீசை கண்டித்து உறவினர்கள் மறியல்

Added : செப் 07, 2022 | |
Advertisement
காவேரிப்பட்டணம், மலையாண்டஹள்ளி அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 30; டிராக்டர் டிரைவர்; ராமாபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ், சிவக்குமார்; பைனான்ஸ் நடத்தும் இவர்களிடம் கடந்த, 8 மாதங்களுக்கு முன் ஆனந்த், ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த, 4 மாதங்களுக்கு முன் வரை வாங்கிய கடனுக்கு, 1.60 லட்சம் வட்டியுடன் கடனை கொடுத்துள்ளார். மேலும், 50 ஆயிரம் ரூபாய் கேட்டு ஆனந்தை


காவேரிப்பட்டணம், மலையாண்டஹள்ளி அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 30; டிராக்டர் டிரைவர்; ராமாபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ், சிவக்குமார்; பைனான்ஸ் நடத்தும் இவர்களிடம் கடந்த, 8 மாதங்களுக்கு முன் ஆனந்த், ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த, 4 மாதங்களுக்கு முன் வரை வாங்கிய கடனுக்கு, 1.60 லட்சம் வட்டியுடன் கடனை கொடுத்துள்ளார். மேலும், 50 ஆயிரம் ரூபாய் கேட்டு ஆனந்தை மிரட்டிய ராஜேஷ், சிவக்குமார் ஆகியோர், இரு மாதங்களுக்கு முன் அவரது டூவீலரை பறித்துள்ளனர்.
மேலும் விநாயகபுரம், கன்னிநகரை சேர்ந்த தமிழரசன் என்பவரிடம் ஆனந்த் சீட்டு போட்டுள்ளார். சீட்டுப்பணத்தை கொடுக்காத தமிழரசன், மாதச்சீட்டு பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஆனந்த், நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனந்த் சாவுக்கு காரணமான பைனான்ஸ், சீட்டு நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தாமதப்படுத்துவதாக கூறி, அவரது உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், 2:00 மணியளவில் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X