8 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 61 வயது முதியவருக்கு 14 ஆண்டு சிறை

Added : செப் 07, 2022 | |
Advertisement
சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த, 61 வயது முதியவருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஈரோடு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.ஈரோடு மாவட்டம் அறச்சலூர் சில்லாங்காட்டு புதூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கர், 61; கடந்த 2021 ஆகஸ்ட் 20ல் அப்பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அறச்சலுார் போலீசில் புகார் செய்தனர்.

சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த, 61 வயது முதியவருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஈரோடு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் சில்லாங்காட்டு புதூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கர், 61; கடந்த 2021 ஆகஸ்ட் 20ல் அப்பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அறச்சலுார் போலீசில் புகார் செய்தனர்.


போலீஸ் விசாரணையில், மற்றொரு, 8 வயது சிறுமியையும் சாக்லெட், பிஸ்கட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அறச்சலுார் போலீசார் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்து சிறையில்
அடைத்தனர்.

வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு பின் நேற்று நீதிபதி மாலதி வழங்கிய தீர்ப்பில், இரு சிறுமிகளை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்தற்காக, சங்களுக்கு தலா, 7 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா, ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட, 2 சிறுமிகளுக்கும் தமிழக அரசு தலா, 3.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம்
பரிந்துரைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X