வாகன மோதலை தடுக்க மேட்டூர் சாலையில் சென்டர் மீடியன்

Added : செப் 07, 2022 | |
Advertisement
ஈரோட்டில், மேட்டூர் சாலையில், வாகன விபத்துக்களை தடுக்க, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக, மேட்டூர் சாலை உள்ளது. சாலையில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் எண்ணற்ற வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் காணப்படும். சாலை, 2019ல் ஒரு வழிப்பாதையாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து

ஈரோட்டில், மேட்டூர் சாலையில், வாகன விபத்துக்களை தடுக்க, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக, மேட்டூர் சாலை உள்ளது. சாலையில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் எண்ணற்ற வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் காணப்படும். சாலை, 2019ல் ஒரு வழிப்பாதையாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வணிகர்கள், மக்கள் சார்பில் மேட்டூர் சாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.
இதனால் வாகனங்கள் எதிர்ரெதிர் திசையில் அதிவேகமாக வந்து நேருக்கு
நேர் மோதிக்கொண்ட விபத்து அதிகம் நடந்தது. இதையடுத்து ஜி.ஹெச்., ரவுண்டானாவில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை, 800 மீட்டர் துாரத்துக்கு சாலை நடுவில், 393 சென்டர் மீடியன்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
சென்டர் மீடியன் தயாரிக்க இரண்டரை ஆண்டுக்கு முன் நிதி கோரப்பட்டது. ஒப்புதல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து சென்டர் மீடியன்கள் தயாரிக்கப்பட்டு சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் முந்திக்கொள்ளும்போது ஏற்படும் விபத்து தடுக்கப்படும் என போலீசார்
தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X