அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்ட கலந்துரையாடல் கூட்டம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
கிருஷ்ணராயபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும்


கிருஷ்ணராயபுரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்துவதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறை பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பேசுகையில், காலை உணவு வழங்கும் திட்டத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு உணவு தயாரித்து வழங்குவது, வழங்கும் நேரம், சத்துணவு பொருள்க‍ளை எவ்வாறு பெறுவது, மாணவர்களுக்கு தினமும் எந்த மாதிரியான உணவுகள் தயாரித்து கொடுப்பது, அதனை செயல்படுத்தும் முறை ஆகியவை குறித்து காலை உணவு திட்டப் பணியில் ஈடுபடும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்து கூறினார்.
இக்கூட்டத்தில் சத்துணவு நேர்முக உதவியாளர் நிலாக்குமார், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தவமணி, பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X